பக்கம்:இன்றும் இனியும்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 ம் அ.ச. ஞானசம்பந்தன் என்பதை எடுத்துக்காட்ட 'கலா நிலையம் நடத்தி அழியா இடம் பெற்றார் சேஷாசலம். கதைகளை மட்டுமே நம்பி வாழுகின்ற இதழ்கள் ஒருபுறம் இருக்கத் 'தமிழில் முடியுமா? என்ற வினாவிற்கு விடையளிக்கும் முறையில் நடைபெறும் கலைக்கதிர்' தமிழ்ப் பத்திரிகை உலகில் ஒரு தனியான இடத்தைப் பெற்றுள்ளது. செய்திகளைப் பிறர் அறிய வைப்பதிலும் ஒரு கலைத்தன்மை உண்டு என்பதைத் தமிழ்ப் பத்திரிகைகள் ஓரளவு உணர்ந்து வருகின்றன. ஒரே செய்தித்தாள் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர்க் கையாண்ட தமிழ் நடைக்கும், அதே செய்தித்தாளின் இன்றைய தமிழ் நடைக்கும் கடல் அனைய வேற்றுமை உண்டு. அதுவும் இந்த நூற்றாண்டின் தமிழ் வளர்ச்சியையே எடுத்துக் காட்டுகிறது. கட்டுரை வரைவதில் இருபதாம் நூற்றாண்டில்கூட நல்ல வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாகக் கூற முடியாது. 'ஹாசிலிட், டி கொன்ஸி', 'சார்லஸ் லாம்ப்' போன்றவர்கள் ஆங்கில மொழியில் எழுதிய கட்டுரை கள் போல் தமிழில் மிகுதியான அளவு இன்னும் வரவில்லை. இக்குறையை ஓரளவு போக்கியவர்கள் டாக்டர் ரா.பி. சேதுப்பிள்ளை, இராஜாஜி போன்ற சிறந்த கட்டுரையாளர்கள் ஆவர். . புத்தம் புதிய் கலைகள் மெத்த வளரும் மேனாட்டின் இலக்கிய, விஞ்ஞான நூல்களைத் தமிழில் ஓரளவு கொண்டுவந்துள்ளோம் எனினும், போதுமான அளவு முயற்சி எடுக்கப்படவில்லை என்றே கூறவேண்டும். கிரேஸ் அனாட்டமி போன்ற மருத்துவ, விஞ்ஞான நூல்களைத் தமிழில் இந்த நூற்றாண்டின் முற்பகுதியிலேயே இலங்கையில் மொழி பெயர்த்துள்ளனர். மேனாட்டுக் கதைகளைக் கூசாமல்