பக்கம்:இன்றும் இனியும்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலப்போக்கில் தமிழ் இலக்கியம் 59 தமிழில் பெயர்த்து நல்ல பெயரையும் இட்டுத் தமதாக் ஆக்கிக்கொள்ளும் பரந்த மனப்பான்மையுடைய சிறுகதையாசிரியர்களும், சினிமா வசனகர்த்தாக்களும் நிரம்ப உளர். தமிழ் மொழியில் உள்ள சிறந்த பகுதிகளை ஆங்கிலத்தில் ஓரளவு செய்து தந்த சிறப்பு வ.வே.சு. ஐயர், பேராசிரியர் அ. சீனிவாசராகவன், டி.பி. கிருஷ்ணசாமி முதலியார் ஆகியோருக்குரியது. வெ.ப. சுப்பிரமணிய முதலியாரின் 'சுவர்க்க நீக்கம்' ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்புச் செய்த சிறந்த நூல். பொ. திரிகூட சுந்தரனார் பல ஆங்கில நூல்களைத் தமிழில் தந்துள்ளார். மொழிபெயர்ப்புக் கலை இன்னும் தளர்நடைப் பருவத்திலேயே உள்ளது. இருபதாம் நூற்றாண்டில் நன்கு வளர்ச்சி யடைந்த பழைய இலக்கியப் பகுதி நாடகமாகும்; புதிய இலக்கியப் பகுதி சினிமாவாகும். முழுவதும் பாடலாகவே இருந்த நாடகங்கள் ஓரளவு மறைந்து நல்ல சூழ்ச்சியுடனும் உரையாடலுடனும் சிறந்த நாடகங்கள் பல மேடைமீது நடிக்கப்படுகின்றன. இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் நாடகங்கள் இசைக் கச்சேரிகளாகவே இருந்தன. இந்த நிலையை மாற்றி, உரையாடலுக்கும் நடிப்புக்கும் தலைமை இடம் தந்து, தமிழ் நாடக மேடையைப் புதிய வடிவில் ஆக்கித் தந்த பெருமை பம்மல் சம்பந்த முதலியாருக்கே உரியது. டி.கே.எஸ். சகோதரர்கள், ஸேவாஸ்டேஜ் குழுவினர், நவாப் இராஜமாணிக்கம் குழுவினர் ஆகியோர் இத் துறையில் பெரும் பணிபுரிந்து வருகின்றனர். பழைய முறையில் நாடகத்துறைக்கு இந்த நூற்றாண்டில் பெருந்த தொண்டு புரிந்தவர் சங்கரதாஸ் சுவாமிகள். சினிமாவைப் பொறுத்தமட்டிலும் பிற படங் களைப் பார்த்துக் காப்பி அடிப்பதும், பிற