பக்கம்:இன்றும் இனியும்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 அ.ச. ஞானசம்பந்தன் பாடல்களைக் கேட்டு இசையமைப்பதும் இன்னும் ஒரளவு இருந்து வந்தாலும், இத்துறையில் கணிசமான அளவு முன்னேற்றம் கண்டுள்ளோம். நல்ல உரை நடையுடன் சிறந்த கருத்துகளையும் தாங்கி வருகின்ற இப்படங்கள் பலருக்கும் பயன்படுவதால் இந்த நூற்றாண்டின் இலக்கிய வளர்ச்சி என்று கூறத்தக்க இடத்தைப் பெறுகின்றது. சினிமாத் துறையில் நகைச்சுவைப் பகுதி இப்பொழுது ஒரு கலையாகவே வளர்ந்துள்ளது. நகைச்சுவை பழைய இலக்கியத்திலும் காணப்படுகின்ற ஒன்றாயினும் இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் அச்சுவை ஒரு தனி இடம் பெற்று வளர்ந்துள்ளது. நகைச்சுவை மூலமே அரிய பெரிய கருத்துகளைக் கேட்போர் மனத்தில் பதியுமாறு செய்வது ஒரு தனிச் சிறப்பாகும். இத் துறையில் ஒப்பாரும் மிக்காரும் இல்லாமல் தமிழ் மொழிக்குத் தொண்டு செய்தவர் காலஞ்சென்ற நகைச்சுவைக் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் ஆவார். இந்த நூற்றாண்டில் அதிகம் வளர்ச்சி அடைந்த மற்றொரு பகுதி பேச்சுக் கலையாகும். இதுவும் இலக்கிய வளர்ச்சியின் ஒரு பகுதியாகவே கருதப்படும். மிகச் சிறந்த பல பேச்சாளர்கள் இக்கால எல்லையில் தோன்றியுள்ளனர். பிற நாடுகளைப் போலப் பேச்சை எழுதிப் படிக்கும் பழக்கம் இத் தமிழ் நாட்டில் இல்லையாகலின் நம் காலத்துக்கு முன்னர் வாழ்ந்தவர்களின் பேச்சுத் திறம்பற்றி ஒன்றும் அறிய முடியாது. இந்தக் கட்டுரையாளனுக்குத் தெரிந்த வரையில், ஞானியார் அடிகள், மாரா. குமாரசாமிப் பிள்ளை, திரு.வி.க. சத்தியமூர்த்தி, டி.கே.சி. அ.மு. சரவண முதலியார் ஆகியோர் பெரும் பேச்சாளர்கள். இன்றுள்ளவர்களில் பெரியார் ஈ.வே. இராமசாமி,