பக்கம்:இன்றும் இனியும்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலப்போக்கில் தமிழ் இலக்கியம் , 61 டாக்டர் ரா.பி. சேதுப்பிள்ளை, ம.பொ. சிவஞானம், ராய சொக்கலிங்கம், சி.என். அண்ணாதுரை, கி.ஆ.பெ. விசுவநாதன், ஜீவானந்தம், இராமகிருஷ்ணன், பல்கலைச் செல்வர் தெ.பொ. மீனாட்சிசுந்தரனார், கி.வா. ஜகந்நாதன் ஆகியோர் முன்னணியில் இடம் பெறுவர். இவர்களுள் சத்தியமூர்த்தி, திரு.வி.க., ஈ.வே.ரா, ம.பொ.சி., அண்ணாத்துரை ஆகியோர் மேடைப் பேச்சைக் கலையாகவே வளர்த்தவர்கள். நேர்மை குன்றாமல், நடுநிலை பிறழாமல், தம் கருத்தை விட்டுக் கொடாமல், பிறர் மனம் நோவாமல் அதே சமயத்தில் ஆணித்தரமாகப் பேசும் கலைக்கு ஒர் எடுத்துக்காட்டாக விளங்கியவர் திரு.வி.க. இப் பெரியாரைப் போலத் தமிழ் பேச இளைஞர் கூட்டம் ஒரு பெரிய அளவில் உருவாகியுள்ளது ஆகலின் இந்த நூற்றாண்டுத் தமிழ் வளர்ச்சியில் இதுவும் ஓர் உறுப்பாகும். அரசியல் கட்சிகள் பலவற்றிலும் நல்ல பேச்சாளர் பலர் உள்ளனர். இந்த நூற்றாண்டின் தமிழ் வளர்ச்சிக்கு இவர்களும் உதவுகின்றனர். - 'கற்றலில் கேட்டலே நன்று' என்ற உண்மையை மிகுதியும் போற்றுகிற நாடாகலின் கேள்விமூலம் தமிழ் வளர்ச்சியைப் பெரிதும் போற்றி வந்துள்ளது தமிழ்நாடு. இப்பொழுது ஒரளவு குறைந்து விட்டாலுங் கூடச் சில ஆண்டுகள் முன்னர்வரை ஆயிரக்கணக் கான சபைகளும், மன்றங்களும், கழகங்களும் பட்டி தொட்டிகளிலுங்கூடத் தமிழையும் சமயத்தையும் பரப்பி வந்தன. மதுரைத் தமிழ்ச் சங்கத்தை வளர்த்த பாண்டித்துரைத் தேவரைத் தமிழ் மக்கள் என்றும் நினைவு கூர்வர். கரந்தைத் தமிழ்ச் சங்கம், சைவ சித்தாந்த மகா சமாஜம், துரத்துக்குடி சைவ சித்தாந்த சபை, கம்பன் கழகம் காரைக்குடி, பம்பாய், தில்லித்