பக்கம்:இன்றும் இனியும்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 அ.ச. ஞானசம்பந்தன் தமிழ்ச் சங்கங்கள், பாரதி தமிழ்ச் சங்கம் கல்கத்தா, அகில பர்மாத் தமிழர் சங்கம் என்பவை அவற்றுள் ஒரு சிலவாம். இவற்றுள் ஒருசில சங்கங்கள் இன்றும் வலிவுடன் நின்று தமிழ்ப்பணி புரிந்து வருகின்றன. ஆண்டுக்கொரு முறை கூடினாலுங்கூட மிகப் பெரிய அறிவாளிகளை நீண்ட தூரத்திலிருந்து வரவழைத்துப் பேசுமாறு செய்து பதினாயிரக்கணக்கான மக்கள் பெரும் பயனை எய்துகின்றனர். சென்ற 25 ஆண்டு களின் முன்னர் மேடைகளில் தமிழில் பேசுவது குறைவு என்று கருதிய பலரும் இன்று தமிழில் பேசவும் எழுதவும் தலைப்பட்டுவிட்டனர். இதுவும் ஒரு பெரிய வளர்ச்சியேயாகும். இந்த நூற்றாண்டின் தமிழ் வளர்ச்சியில் சைவ, வைணவ மடாலயங்களும் ஓரளவு பங்கு கொண் டுள்ளன. திருப்பனந்தாள் மடாலயத்தார். நூற்றுக் கணக்கான தமிழ் நூல்களை எளிய விலையில் அச்சிட்டு வழங்குகின்றனர். அல்லாமலும் தமிழ்க் கல்லூரிகள் நடத்தியும் சில மடங்கள் பணிபுரிகின்றன. ஏனைய நாடுகளில் பிற சமயத்தார் செய்யும் பணியை நோக்கத் தமிழ்நாட்டு மடங்களின் தமிழ்ப் பணி அளவாலும் தரத்தாலும் குறைந்துள்ளது என்றாலும் நாளாவட்டத்தில் அவைகளும் நன்கு பணிபுரிய முன்வரும் என எதிர்பார்க்கலாம். இந்த நூற்றாண்டுத் தமிழ் வளர்ச்சியில் வானொலியும் சொற்பொழிவுகள், நாடகங்கள், நிகழ்ச்சிச் சித்திரங்கள் மூலமாக ஓரளவு பணி புரிந்து வருகின்றது. வினாடி வினா’ப் போன்ற புதிய முறைகளைக் கையாண்டு தமிழில் எதுவும் முடியும் என்பதை எடுத்துக் காட்டியுள்ளனர். தமிழ் மூலம்