பக்கம்:இன்றும் இனியும்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலப்போக்கில் தமிழ் இலக்கியம். 63 ப்ொது அறிவை வளர்ப்பதற்கு இவை போன்றவை துணை செய்யும். தமிழ் வளர்ச்சிக் கழகத்தார் வெளி யிட்டு வரும் கலைக்களஞ்சியம் இந்த நூற்றாண்டின் சிறந்த தமிழ்ப் பணிகளுள் ஒன்றாகும். தமிழ்த் துறையில் ஈடுபட்டிராமல் பிற துறைகளில் உள்ள தமிழரும், பிற மொழியாளரும், பிற நாட்டுக் கழகங்கள் சிலவும் சிறந்தவகையில் தமிழ்த் தொண்டு புரிந்து வருகின்றனர். உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானியாகிய டாக்டர் கே.எஸ். கிருஷ்ணன் போன்றோர் தமிழ் இலக்கியக் கடலில் திளைத்து ஓய்வு நேரங்களில் அதனைப் பிறர்க்குக் கூறிப் பயன் பெறச் செய்கின்றனர். இற்றை நாளில் ஆட்சித் துறையில் ஈடுபட்டிருக்கும் பல ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பலரும் வியக்கும் அளவில் தமிழ் இலக்கிய, இலக்கண அறிவு பெற்று விளங்குகின்றனர். இத் துறையில் முன் நிற்பவர் தொ.மு. பாஸ்கரத் தொண்டமான் ஆவார். செக்கோஸ் லோவேக்கியாவைச் சேர்ந்த கமில்ஸ்வலபில்’ போன்றோர் தமிழ் கற்றுத் தமிழில் எழுதும் திறம் பெற்றுப் பிற நாட்டாரும் தமிழ் மொழியின் பெருமையை அறியுமாறு செய்து வருகின்றார். ஏனைய துறைகளில் முன்ன்ேற்றம் காண்பது போலத் தமிழ்த்துறையிலும் இந்த நூற்றாண்டில் அதிக முன்னேற்றம் காணப்படுகிறது. அறுபது ஆண்டுகளில் பல்வேறு துறைகளிலும் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை ஒரு சிறிய கட்டுரையில் எடுத்துக் காட்டுவது இயலாத காரியந்தான். எத்துணையோ பெயர்கள் விடப் பட்டுள்ளன என்பதைக் கட்டுரையாளன் அறியாமல் இல்லை. எனினும், இடங்கருதி விடப்பட்டுள்ளது என்பதை நினைவிற் கொண்டு படிப்பவர்கள் மன்னிக்க வேண்டுகிறேன்.