பக்கம்:இன்றும் இனியும்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 தமிழ் வளர்ந்திருக்கிறதா? வளர்ச்சி என்று சொல்லும்பொழுது இரண்டு வகையான வளர்ச்சியைக் குறிக்கிறோம். ஒன்று நீளத்தில் வளர்வது. மற்றொன்று குறுக்கே வளர்வது. பருப்பொருள்களைப் பொறுத்தமட்டில் இந்த இரண்டு வகை வளர்ச்சியையும் நாம் காண்கின்றோம். ஆனால், நுண்பொருள்களைப் பொறுத்தமட்டில் வளர்ச்சி வேறுவகைப்படும். தமிழ் வளர்ந்திருக்கிறதா என்றால், அளவால் பெற்ற வளர்ச்சியைக் குறிக்குமா, அன்றித் தரத்தால் பெற்ற வளர்ச்சியைக் குறிக்குமா, அன்றி இரண்டையுமே குறிக்குமா என்று தெரிய வேண்டும். ஒருவேளை இந்த மூன்றையுமே (நீளம், அகலம், தரம்) இவ் வினா குறிப்பிட்டாலும் குறிப்பிடலாம். எவ்வாறாயினும் இந்த மூன்று துறைகளிலும் இந்த இருபது நூற்றாண்டுகளில் தமிழ் எங்ங்னம் வளர்ந் திருக்கிறது என்பதை இச் சுருங்கிய அளவில் ஒருவாறு காண முற்படலாம். - இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுக்ளுக்கு முன்னர்த் தமிழில் சில இலக்கியங்கள், ஒன்றிரண்டு இலக்கண நூல்கள் தோன்றின. இந்த இலக்கிய நூல்களைப் பத்துப் பாட்டு என்றும், எட்டுத்தொகை என்றும் குறிப்பிடுகிறோம். இலக்கண நூலைத்