பக்கம்:இன்றும் இனியும்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளர்ந்திருக்கிறதா? 65 'தொல்காப்பியம் என்று கூறுகிறோம். தமிழ்நாட்டின் வரலாற்றில் கிறிஸ்துநாதர் தோன்றுவதற்கு ஒன்று அல்லது இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர்த் தொடங்கி அவர் தோன்றிய பின்னர் மூன்று அல்லது நான்கு நூற்றாண்டுகள் முடியத் தமிழ்நாட்டில் தோன்றிய நூல்களின் எண்ணிக்கை பத்தும் எட்டும் பதினெட்டு என்று கூறினால் தவறாகாது. ஏறத்தாழ ஐந்து நூற்றாண்டுகளில் பதினெட்டு நூல்கள்தாம் தோன்றின. இவ்வாறு கூறுவதால் வேறு நூல்களே அக் காலத்தில் தோன்றவில்லை என்று கூற விரும்ப வில்லை. பல தோன்றியும் இருக்கலாம். காலாந் தரத்தில் நிலைபெற்றிருக்கும் சக்தியை இழந்து அவை அழிந்திருக்கலாம். இப்பொழுது உள்ள பதினெட்டு நூல்களில், எட்டு நூல்கள் தொகுப்பு நூற்களேயாகும். புறநானூறு' 'அகநானூறு போன்றவை பற்பல புலவர் களால் பல காலத்தில் பாடப்பெற்று யாரோ ஒரு சிலரால் பிற்காலத்தில் தொகுக்கப் பெற்றனவாகும். இந்நூல்களுள் எது முன்னர்த் தோன்றியது. எது பின்னத் தோன்றியது? என்று அறுதியிட்டுச் சொல்ல முடியவில்லையாதலால் இந்த ஐந்து நூற்றாண்டுகளில் தமிழ் வளர்ந்திருக்கிறதா என்றும் காண முடிய வில்லை. என்றாலும் ஒன்றுக்கொன்று தரத்தால் குறையாத இந் நூல்களில் வளர்ச்சி இருந்து வந்தது. மேல் நோக்கி வளருகின்ற இயல்பு குறைந்திருப்பினும், குறுக்கே வளருகின்ற இயல்பு இருந்து கொண்டு இருக்கிறது என்று கூறலாம். - இரண்டாம் நூற்றாண்டில் தோன்றிய 'சிலப்பதி காரம்', அதனையடுத்துத் தோன்றிய 'மணிமேகலை, அதனையடுத்து ஒன்றிரண்டு நூற்றாண்டுகள் கழித்துத் தோன்றிய 'பெருங்கதை', (உதயணன் சரிதம்) ஆகிய இ.இ.-5