பக்கம்:இன்றும் இனியும்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 : அ.ச. ஞானசம்பந்தன் மூன்று நூல்களும் இவ்வளர்ச்சி நீளத்திலும், அகலத்திலும் ஏற்பட்டிருப்பதை அறிவிக்கின்றன. தனியொரு பெண்ணின் வாழ்க்கையைக் காவிய முறையில் சித்தரித்துக் காட்டிய சிலப்பதிகாரம், தமிழ் நாட்டுப் பெண் ஒருத்தியின் வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டிய மணிமேகலை ஆகிய இரண்டு நூல் களும், அதற்கு முன்னர் இல்லாத முறையில் தமக்கெனப் புதுவழி வகுத்துக்கொண்டு விளங்கின வாதலால், இதை உயர அல்லது நீள வளர்ச்சி என்று கூறலாம். துண்டு துண்டுப் பாடல்களாக, யாரோ ஒருவருடைய ஒரு வீரச் செயலையோ அன்றிக் கொடை வண்மையையோ பாடிய புறநானூறு, பதிற்றுப்பத்துப் பாடல்கள்போல் இராமல், ஒருவருடைய வாழ்க்கையைத் தொடக்கத்திலிருந்து இறுதிவரையில் பாடிச் சென்ற சிலப்பதிகாரம் போன்றவை புதுமுறை வளர்ச்சி பெற்றவை என்று சொல்வதில் தவறில்லை. . ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் சில சிறந்த செயல்களைச் செய்திருக்கலாம். அந்தச் செயல்களை மட்டும் எடுத்துப் பாராட்டுவது எளிதான காரியம். அங்ங்னம் பாராட்டப்படும் பாடல் சிறந்த ஒரு கருத்தை அல்லது நிகழ்ச்சியை உட்கொண்டு நிற்பதால் பாடல் என்றென்றும் வாழும் உரிமையைப் பெற்று விடுகிறது. ஆனால், அந்த மனிதனுடைய வாழ்க்கை யில் நிகழும் அன்றாட நிகழ்ச்சிகளையெல்லாம் சொல்லித் தீரவேண்டிய கடப்பாட்டையுடைய சிலப்பதிகாரம் போன்ற காப்பியம் முற்றிலும் சுவை குன்றாமலிருப்பது கடினம். ஏனென்றால், வியத்தகு நிகழ்ச்சிகள் ஒன்றும் நடைபெறாத நேரத்தில் காவியத்தையும் நடத்திக்கொண்டு சென்று, சுவை