பக்கம்:இன்றும் இனியும்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

iv இதுதான். பெரும்பாலும் கடந்த காலத்தின் அருட்கொடையாகிய இலக்கியக் கட்டுரைகளைக் கொண்ட இந்த நூலுக்கு "இன்றும் இனியும்" என்று ஏன் பெயரிட வேண்டும்? நேற்றைய சிந்தனையின் விளைவு இன்றைய இக்கியம்; இன்றைய அனுபவத்தின் பயன் நாளைய நோக்கு. இந்த மூன்று காலத்தையும் பிரிக்க முடியாது. ஆனால், இலக்கியம் என்ற வுடனேயே கடந்த காலப் பிண ஆய்வோடு இணைத்துக் காணுகின்ற தவறான போக்கினைப் பல இடங்களிலே காணுகின்றோம். அந்தத் தவற்றின் கொடுமுடியினைக் காட்டவே போலும் பெரும்பாலும் பண்டை இலக்கிய விளக்கமாகவுள்ள இக் கட்டுரைத் தொகுப்புக்கு இப்பெயர் அமைத்தார் என்று எண்ணத் தோன்றுகின்றது. மகாகவி தாகூரின் நாடகத் தொகுப்புகளில் ஒரு நூலுக்கு (Sacrifice) (தியாக பலி) என்று பெயர், அதே தலைப்புள்ள நாடகத்தை அந்த நூலின் முதலில் அமைக்கவில்லை. தியாகத்தின் பல்வேறு வளர்ச்சி முறையில் விளங்குவது அந்த நாடக நூல். தியாக தத்துவம் வரவர வளர்ந்து கடைசி நாடகத்தில் தியாகத்தின் உச்சத்தைக் காட்டுவார் தாகூர். அதே போலப் பேராசிரியர் அ.சஞா.வும் இந்த நூலுக்குப் பெயரிட்டுள்ளார். கடந்த காலமெல்லாம் இன்றைக் கும் நாளைக்கும் பயன்பட வேண்டும். வேறு வகையில் சொன்னால், உரமாகிவிட்ட இறந்த காலம் புறத்தே புலப்படாது வேர் பாய்ந்துள்ள கடந்த காலம் புதையுண்டிருக்கும். ஆனால், அந்த வேரின் ஊட்டம் பெற்றுத்தான் நிகழ்கால வளமும் எதிர்கால நம்பிக்கையும் சிறக்கும். எண்ண எண்ண முடிவற்றுட்