பக்கம்:இன்றும் இனியும்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளர்ந்திருக்கிறதா ? . 67 யுடைய பாடலையும் அதனுள் பெய்தல் எவ்வளவு கடினம் என்பது சொல்லத் தேவையில்லை. இவ்விரண்டு காரியங்களையும் நன்கு சாதித்த காரணத்தினால்தான் சிலப்பதிகாரம் இருவகை வளர்ச்சியையும் பெற்ற நூல் என்று கூறுகிறோம். இந்த மூன்று நூல்களையும் அடுத்து மூன்று நூற்றாண்டுகள் வரையில் தமிழ்நாட்டில் பெரும் இலக்கியங்கள் ஒன்றும் தோன்றவில்லை. ஏழாம் நூற்றாண்டின் இடைப் பகுதியில்தான் தேவாரங்கள் தோன்றலாயின. தேவார காலத்திற்கு முன்னர்த் தோன்றிய நூல்களில் கடவுளைப் பற்றிய கருத்துகளும் சிற்சில துதிப்பாடல்களும் அங்கங்கே காணப்பட்டா லும் திருமுருகாற்றுப்படை, பரிபாடலில் சில பாடல்கள், தொகை நூல்களில் கடவுள் வாழ்த்துப் பாடல்கள், ஆகியவை நீங்கலாக, தனிப்பட்ட முறையில் கடவுளையே பாடும் நூல்கள் இல்லை என்று சொல்லலாம். இதற்கொரு காரணமும் உண்டு. தேவார காலம் வரையில் சமயம் என்பது மக்கள் வாழ்க்கையோடு ஒன்றியதாய் இருந்து வந்துள்ளது. தமிழனைப் பொறுத்தமட்டில் அவனுடைய அக வாழ்க்கையும் புறவாழ்க்கையும் எவ்வளவு இன்றியமை யாதவையோ அவ்வளவு இன்றியமையாததாகச் சமய வாழ்க்கையும் இருந்து வந்தது. வாழ்க்கையின் எல்லாப் பகுதிகளும் செம்மையான முறையில் நடத்தப்பெறும் பொழுது அங்கே சமய வாழ்க்கையைக் காண் கின்றோம். கடவுள் நம்பிக்கை என்பது பழந்தமிழ னுடைய குருதியோடு சேர்ந்துவிட்ட ஒன்று ஆதலால், அதை ஓயாமல் தனியே எடுத்துக் கூறிக்கொண்டிருக்க வேண்டிய இன்றியமையாமை இல்லை. ஆனால்,