பக்கம்:இன்றும் இனியும்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 அ.ச. ஞானசம்பந்தன் களப்பிரர் இடையீட்டின் பின்னர்த் தமிழன் வாழ்க்கை யின் அடிப்படை கெட்டுவிட்ட காரணத்தால் கடவுளைப் பற்றியும் சமய வாழ்க்கையைப் பற்றியும் வெளியே எடுத்துப் பேசும் இன்றியமையாமை ஏற்பட்டது. கி.பி. ஏழாம் நூற்றாண்டு முதல் பன்னிரண்டாம் நூற்றாண்டு வரையில் தமிழிலக்கியம் மிகப் பெரிய வளர்ச்சியை அடைந்தது என்று கூறலாம். அகலம், நீளம் ஆகிய இரண்டு பக்கங்களிலும் பெரு வளர்ச்சி ஏற்பட்டதோடு, நல்ல வலிமையும் பெற்றது என்று சொல்ல வேண்டும். சிந்தாமணி, கம்பராமாயணம், பெரியபுராணம் போன்ற காப்பிய நூல்களும், தேவாரம், திருவாசகம், பிரபந்தங்கள் போன்ற பக்தி இலக்கிய நூல்களும், நன்னூல், சூடாமணி நிகண்டு, பிங்கலந்தை நிகண்டு போன்ற கருவி நூல்களும் இந்த இடைக்காலத்தில்தான் தோன்றின. அளவாலும் இக் காலத்தில் தோன்றிய நூல்கள் மிகுதியுடையன. தரத்தால் இவை பழைய சங்க நூல்களைவிட வளர்ச்சி யடைந்துள்ளனவா என்று கூறுவது சிறிய கடினம். ஏனென்றால் சங்க நூல்களில் காணப்பெறும் பாடல்களின் போக்கிற்கும் கருத்திற்கும், இக்காலத்தில் தோன்றிய பாடல்களின் போக்கிற்கும் கருத்திற்கும் வேறுபாடு மிகுதியுண்டு. - - சங்கப் பாடல்களில் புலவர்கள் அகம், புறம் என்ற இரண்டு துறைகளிலும், விரிந்து செல்வதை விட ஆழ்ந்து செல்வதையே குறிக்கோளாகக் கொண்டிருந் தார்கள் என்று நினைக்கவேண்டியுள்ளது. ஏனென் றால், எவ்வளவுதான் உயர்ந்த பொருளாக இருப்பினும் ஒருவன், ஒருத்தி என்ற இருவரிடையே தோன்றுகின்ற