பக்கம்:இன்றும் இனியும்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 அ.ச. ஞானசம்பந்தன் அவர்கள் பாடியுள்ளார்கள் என்பதே நாம் அவற்றை அலுப்புத் தட்டாமல் படிப்பதற்குக் காரணமாகும். இதுவே ஆழ்ந்து செல்லும் முறை எனப்படும். ஒரே சுவையில் ஆழ்ந்து சென்று பல்வேறு அனுபவங்களைப் பாடும் இம்முறை சங்கப் பாடல்முறை என்று கூறலாம். இதனையடுத்துள்ளது பல்வேறு சுவைகளைப் பாடுவதாகும். இராமாயணம், சிந்தாமணி போன்ற காப்பியங்கள் இவ்விரண்டாவது வகையைச் சேர்ந்தவை. இந் நூல்கள் விரிந்து செல்லும் இயல்பைத் தலைமையாகக் கொண்டு தோன்றியவை. மனித அனுபவம் எத்தனை எத்தனை வகைப்படுமோ அந்த அனுபவத்தில் எத்தனை சிக்கல்களும் பிரச்சினைகளும் ஏற்படுமோ அவை அனைத்தையும் ஒருவாறு தாங்கி வெளிவருகின்ற விரிந்த இயல்புடைய இப் பெரு நூல்கள். விரிந்து செல்கின்றன என்ற காரணத்தால் இவை ஆழ்ந்து செல்லும் இயல் புடையன அல்லவோ என்று யாரும் ஐயப்பட வேண்டா. பல்வேறு வகையான சூழ்நிலைகளையும், சந்தர்ப்பங்களையும், சுவைகளையும் இவை பேசு கின்றன என்ற காரணத்தால் விரிந்து செல்லுகின்றன என்று கூறினோமே தவிர, அதனால் இவை ஆழ்ந்து செல்லவில்லையென்பது கருத்தன்று. இந் நூல்கள் தனிப்பட்ட எந்த ஒரு சந்தர்ப்பத்தை எடுத்துக் கொண்டாலும், எந்த ஒரு பாத்திரத்தின் மனோ நிலையை எடுத்துக்கொண்டாலும் அப் பாத்திரப் படைப்பிலும், சூழ்நிலைப் படைப்பிலும் மிக மிக ஆழ்ந்து சென்றுள்ளதைக் காண முடியும். எனவே, இவ்விடைக்கால நூல்கள் ஆழ்ந்து செல்லும் இயல்போடு விரிந்து செல்லும் இயல்பையும்