பக்கம்:இன்றும் இனியும்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளர்ந்திருக்கிறதா? 7 பெற்றுள்ளனவாதலால் சங்க நூல்களைக்காட்டிலும் ஒருமுறையில் வளர்ச்சி பெற்றுள்ளன என்று கூறலாம். இவ் இடைக்காலத்தில் தோன்றிய நூல்கள் அளவாலும் சங்க நூல்களைக் காட்டிலும் வளர்ச்சி யடைந்திருந்தன. எந்த வகையான உணர்ச்சியையும் வெளியிட ஆசிரியப்பா, கலிப்பா என்ற இரண்டே வகையான பாடல்களைத் தவிர, வேறு வகையான பாடல் முறையை மேற்கொள்ளாத சங்கப் பாடல் களினும், மிகவும் விரிந்து கொடுக்கக்கூடிய விருத்தப் பாவைப் பயன்படுத்திய இவ் இடைக்கால நூல்கள் பாடல் முறையிலும் வளர்ச்சியடைந்தன என்று கூறலாம். பாடல்களில் தோன்றும் சொற்கள் பொருள்களைத் தம்முடைய பொருள் உணர்த்தும் சக்தியாலும் ஒசைச் சக்தியாலும் வெளியிடும் என்பது நாம் அறிந்ததே. சங்கப் பாடல்களில் சொற்களின் இந்த ஒசைச் சக்தியை மிகுதியும் பயன்படுத்தினார்கள் என்று சொல்ல முடியாது. ஏனென்றால், அவர்கள் மேற் கொண்ட ஆசிரியப்பாவிற்குச் சொற்களின் இந்தச் சக்தியைப் பயன்படுத்தும் வன்மை மிகுதியாக இல்லை. எனவே, இடைக்கால இலக்கியம் இக் குன்றபாட்டை உணர்ந்து, ஆசிரியப்பாவை ஏறத்தாழ ஒதுக்கியே விட்டது என்று கூறலாம். இதுவும் ஒரு வகை வளர்ச்சியே - - மொழி இக்காலத்தில் அடைந்த வளர்ச்சியை மனத்திற்கொண்டு அந்த வளர்ச்சியை ஏற்றுக் கொள்கின்ற முறையில் அதற்கேற்ற இலக்கணம் எழுதப் பெற்றது. தொல்காப்பியத்தோடு சில வகைகளில் மாறுபட்டும் புதியவற்றை ஏற்றுக்