பக்கம்:இன்றும் இனியும்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 அ.ச. ஞானசம்பந்தன் கொண்டும், இலக்கிய வளர்ச்சிக்கு உதவிய பெருமை இக்காலத்தில் தோன்றிய இலக்கண நூல்களுக்கு உண்டு. இந்நூல்கள் தோன்றியதே, மொழி வளர்ச்சியைப் பெரியோர்கள் ஏற்றுக் கொண்டார்கள் என்பதை அறிவுறுத்துவதாகும். இதனையடுத்துப் பதின்மூன்று முதல் பதி னெட்டாம் நூற்றாண்டு முடிய ஒரு காலப் பகுதி யாகும். இக்காலப் பகுதியில் தமிழ் வளர்ந்திருக்கிறது என்று உறுதியாகச் சொல்வதற்கில்லை. பெரும் காடு அழிந்து குட்டையும் நெட்டையுமான சிறு மரங்களும் செடிகளும் எஞ்சி இருப்பதைப்போல இந்த நூற்றாண்டுகளில் குட்டையும் நெட்டையுமான சிறு நூல்களும் பிரபந்தங்களுமே எஞ்சியுள்ளன. என்றாலும் இந்தப் பகுதியிலும் ஓரிரு வழிகளில் தமிழ் வளராமல், இல்லை. பன்னிரண்டாம் நூற்றாண்டு முடிய, சாத்திரம் என்ற பகுதி தமிழ் இலக்கியத்தில் இல்லை. பதினான்காம் நூற்றாண்டையடுத்துத் தோன்றிய 'சிவஞான போதம்', 'சிவஞான சித்தியார் போன்ற நூல்கள் தமிழ் இலக்கிய உலகில், அதுவரை காணப்படாத புதுமுறை வளர்ச்சியாகும். உணர்வு உலகம் ஒன்றிலேயே மூழ்கி இருந்த தமிழன் அதனை விட்டு வெளியே வந்து, தான், உலகம், தனக்கும் உலகிற்கும் உள்ள தொடர்பு, உலகப் படைப்பின் மூல காரணம், அந்த மூலகாரணத்திற்கும் தனக்கும் உள்ள தொடர்பு என்பவற்றைப் பற்றியெல்லாம் சிந்திக்கத் தொடங்கினான். அங்ங்னம் சிந்தித்துக் கண்ட முடிவுகளை இலக்கிய வாயிலாக வெளியிட்டான். சமய சாத்திரங்கள் என்ற பெயருடன் இவை தோன்றின. தமிழ்மொழி வளர்ச்சியில் முற்றிலும் புதிய துறை வளர்ச்சி என்று கூறலாம் இதனை. (மணி