பக்கம்:இன்றும் இனியும்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளர்ந்திருக்கிறதா ? 73 மேகலை போன்ற முந்தைய நூல்களில் தத்துவக் கருத்துகள் உண்டு. எனினும் சாத்திர நூல்கள் இருந்தமைக்குரிய சான்றுகள் இல்லை) - இப்புதிய துறையில் வளர்ச்சி ஏற்பட்டதே தவிரப் பழைய இலக்கியத் துறையில் குமரகுருபரர், சிவப்பிரகாச சுவாமிகள் என்ற இருவரைத் தவிர மற்றையோர் பெரும் அளவில் இலக்கியம் ஒன்றும் செய்யவில்லை. இவர்களுடைய நூல்களும் பழைய வற்றோடு ஒப்புநோக்கக் குட்டையானவையாக உள்ளன. எவ்வளவு முயன்றும் காலக்கூறு பாட்டால் இவர்கள் பழைய நிலையை எட்ட முடியவில்லை. நூல்களுக்கு ஆழ்ந்த விரிவுரைகள் எழுதுதல் என்ற புதிய துறை தமிழ் இலக்கிய வளர்ச்சியில் இக் காலத்தில் தோன்றிய ஒன்றாகும். நச்சினார்க்கினியர், பேராசிரியர், பரிமேலழகர் என்பவர்களோடு சிவஞான போதப் பேருரை எழுதிய சிவஞான சுவாமி களும் இப் புதிய துறை வளர்ச்சிக்குப் பேருதவி புரிந்தார்கள். - - பத்தொன்பது இருபதாம் நூற்றாண்டுகளில் தமிழ் இலக்கிய வளர்ச்சியில் அகல வளர்ச்சியைக் காண்கிறோமே தவிர, ஆழ்ந்த வளர்ச்சியைக் (நீளம்) காண முடியவில்லை. உரைநடை வளர்ச்சியும், வேற்று மொழித்தொடர்பு ஏற்பட்டமையால் பல்வேறு துறைகளில் புதிய நூல்கள் தோன்றுகின்ற இயல்பும் நிறைந்தன என்பது உண்மைதான். ஆனால், இவற்றுள் எத்தனை நூல்கள் காலத்தை வென்று நிற்கும் என்பது ஆராய்ச்சிக்குரியது. இருபதாம் நூற்றாண்டில் இலக்கிய

  • Depth