பக்கம்:இன்றும் இனியும்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 அ.ச. ஞானசம்பந்தன் வளர்ச்சியடைவதற்கு உரிய அச்சுக் கருவிகள், ஒலி பரப்பிகள், செய்தித்தாள்கள் போன்ற பல சாதனங் களும் எண்ணற்று மலிந்து விட்டன. என்றாலும் என்ன? இவையனைத்தையும் நிரப்புகின்ற முறையில் கட்டுரைகளும், சிறுகதைகளும், நாடகங்களும் வெளி வருகின்றன. அளவால் கணக்கிடும்பொழுது இதனைப் பெருவளர்ச்சி என்று கூறலாமேனும், தரத்தால் கணக்கிடும்பொழுது வளர்ச்சி என்று கூற முடியுமா? கடந்த இருபது நூற்றாண்டுகளையும் எடுத்துக் கொண்டு பார்க்கும்பொழுது பன்னிரண்டாம் நூற்றாண்டுவரை இலக்கியம் தரத்தாலும் அளவாலும் வளர்ந்து, பின்னர்ப் புதுமுறை வளர்ச்சியைப் பெற்றுப் பத்தொன்பது இருபதாம் நூற்றாண்டுகளில் அளவால் மட்டும் வளர்ச்சியைப் பெற்றிருக்கின்றது என்று கூறினால் தவறில்லையோ என்று நினைக்கின்றேன்.