பக்கம்:இன்றும் இனியும்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 தனித்தமிழ் உயர்தனிச் செம்மொழியாகிய நம் தமிழ் தனித்து இயங்க வல்லதா என்ற வினா இன்று தோன்றுவ தில்லை. கால்டுவெல் பெரியாரின் முயற்சியின் பயனாக அது இயங்கவல்லது என்ற உண்மை நிலை நாட்டப் பெற்றுவிட்டது. ஏனைய மொழிகளின் உதவி இன்றியே தமிழன் தன் கருத்துகளை வெளியிட முடியும். எத்துணைப் புதியதாக உள்ள அறிவியல் கலைகளேனும் அவற்றைத் தமிழில் வெளியிடலாம். ஆனால், இங்ங்னம் செய்வதற்குத் தடையாக உள்ளது கலைச் சொற்கள் தமிழில் இல்லை என்பதேயாம். இதனைப் பின்னர்க் காண்போம். தமிழ்மொழி தனித்தியங்க வல்லது என்பதும் தனித்தியங்கித்தான் தீரவேண்டும் என்பதும் வேறு வேறு கருத்துகள். அது தனித்தியங்க வல்லது என்பதில் ஒரு சிலர் தவிர ஏனையோர் மாறுபட்ட கருத்துடைய ரல்லர். அவ் ஒரு சிலரும் ஆழ்ந்து ஆராயாது முடிவுக்கு வருவதாலும், வேண்டுமென்றே முரண்படுவதாலும் அவர்களைப்பற்றிக் கவல வேண்டுவதின்று. தமிழ் தனது பரந்துபட்ட மொழியின் மிகுதியானும், ஆழ்ந்துள்ள பொருட்சிறப்பானும் தனித்தியங்கக்