பக்கம்:இன்றும் இனியும்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 அ.ச. ஞானசம்பந்தன் கூடியதேயாயினும், இன்றைய நிலையில் இது இன்றியமையாததா என்று காண வேண்டும். ஊர், நகரம், நாடு என்ற நிலை நீங்கி இன்று உலகம் முழுவதும் ஒன்று என்ற நிலை வந்துவிட்டது. மொழியின்மாட்டுப் பற்று இன்றி இருக்கிறவர் ஒருவருமிலர். ஆனால், மொழி மனிதனுடைய வாழ்வுக்கு இன்றியமையாததொரு கருவியே என்பதை மறந்துவிடுதலாகாது. மொழிக்காக மனிதன் வாழ்கிறான் என்ற நிலை ஏற்படுமாயின் அது வருந்தத் தக்கதே. மொழியின் பொருட்டு மனிதன் வாழ முற்பட்டால் அந்நிலையில் மனிதனின் மதிப்புத் தாழ்ந்துவிடுகிறது. எந்த ஒரு நாட்டில் மனிதனை மனிதன் என்பதற்காக மதிக்கவில்லையோ அந்த நாடு விரைவில் கீழ்நிலையடையும். கடவுட் படைப்புகளி லெல்லாம் மேம்பட்ட மனிதன் தன் வாழ்வு செம்மையுறுவதற்காகக் கொண்டுள்ள கருவிகளில் மொழி மிகச் சிறந்த ஒன்று மனிதன் மனத்தில் தோன்றும் எண்ணத்தை வெளியிடப் பல வழிகள் உள்ளன. குறியீடு முதல் மொழிவரை அவை பல திறப்பட்டன. ஆனால், அவற்றுள் எல்லாம் தலைசிறந்தது மொழியே. னால், எண்ணங்களை அப்படியே வெளியிடும் வன்மை மொழிக்கில்லை. இருக்கவும் இயலாது. அதன் காரணம் மனிதன் தானாக ஆக்கிக்கொண்டதே மொழி என்பதாகும். நாளாவட்டத்தில் தனது அறிவும் அனுபவமும் வளர வளர மனிதன் தன்னால் பேசப்படும் மொழியையும் மாற்றியமைத்துக் கொண்டிருக்கிறான். நமது தாய்மொழியாகிய தமிழும் இவ் விதிக்கு விலக்குடையதன்று. எனவே, மாறுந்