பக்கம்:இன்றும் இனியும்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

y பரவுகின்ற ஆழ்ந்த கருத்துடையது நூலின் இனிய பெயர். இனி, நூலின் அகப்பொருள் காண்போம்: தொன்றுதொட்டு இன்றுவரை தமிழன்னை திருநடையிட்ட நெறியின் செறிவும் சிறப்பும் தெரிய வேண்டுமா? தமிழ் இலக்கிய வளர்ச்சியின் இயல்பு தெரியவேண்டுமா? எவ்வெப்போது வளர்ச்சியின் தொய்வும் திட்பமும் காணப்பட்டன என்று அறிய வேண்டுமா? என்று பிறந்தவள் என்றுணராத யல்பினளாகிய தமிழ் மகளின் எதிர்காலத் தேவைகளென்ன? - இத்தகைய வினாக்கட்குத் திட்ப நுட்பமான திறனாய்வு வன்மையோடு விடைகளைத் தருவன நான்கு கட்டுரைகள் (6, 7, 10, 16. கடந்த காலம் பற்றியும் நிகழ்கால நிலவரத்தைப்பற்றியும் ஒரளவே அறிந்து, எதிர்காலம்பற்றிய நம்பிக்கையோடிருப்பவர் கள் இன்றைய இளைஞர்கள். கடந்தகால நிகழ்காலங் களைப் பற்றிப் புரிந்துகொண்டு, எதிர்காலத் திட்ட மிடுவதற்கு அறிஞர் அ.ச.ஞா. போன்றவர்களை அவர்கள் நாடுவது இயற்கை. கோவையிலுள்ள பூ.சா.கோ. கலைக்கல்லூரி, பூ.சா.கோ. பொறியியற் கல்லூரி ஆகிய கல்வி நிலைய மாணாக்கர்கள் எழுப்பிய வினாக்களுக்கு அ.ச.ஞா. அளித்த விடைகளால் உருவாகியது இந்நூலின் 16-ஆம் கட்டுரை. - பதிற்றுப்பத்தின் ஐந்தாம் பத்து, தமிழக வரலாற்று ஆராய்ச்சியாளர்க்கும் இலக்கியத் திறனாய்வாளர்க்கும் பெருங் கருவூலமாகக் கையாளப்படுவது. அந்தப் பத்துப் பாடல்களையும் அதன் பதிகத்தையும் அடிப்படையாகக்கொண்டு பல பேராசிரியர்கள்