பக்கம்:இன்றும் இனியும்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனித்தமிழ் 7 தன்மையுடையது மொழியென்றால், அது நம்மால் பயன்படுத்திக்கொள்ளப்பட வேண்டியதொன்றே தவிரப் போற்றி வழிபாடு மட்டும் ச்ெய்வதற்குரிய தன்று என்ற உண்மை விளங்கும் வழிபாடு செய்வதற்கே உரியது என்றால் எம் மொழி என்ற வினாத் தோன்றியே தீரும். பழங்காலத்தில் இருந்த மொழியா, அன்றி உருவம் மாறி இன்று வழங்கும் மொழியா? எது நமது வழிபாட்டிற்குரியது? எனவே, மொழி நமக்குப் பயன்பட வேண்டியதொன்று என்ற முடிவுக்கே வர வேண்டி நேரிடும். அது நமக்குப் பயன்பட்ட வேண்டியதென்ற காரணத்தால் அதனிடத்து அன்பும், ஆர்வமும் கொள்ளக்கூடா தென்பது கருத்தன்று. அன்பு செய்யப்படலாம்; போற்றப்படலாம்; அதற்காக அது எங்ங்ணம் இருப்பினும் மாற்றத்திற்குரியதன்று என்று நினைப்பதே தவறாகும். - - மனித மனத்தில் தோன்றும் எண்ணங்களை வெளியிடுவதற்குரிய கருவியே எல்லா மொழிகளும் என்றால், அம் மொழி அத் தொழிலைச் செம்மையாக செய்ய வேண்டும். ஆனால், உண்மையை ஆராயு மிடத்து உலகிடைத் தோன்றிய எந்த மொழியும் இத் தொழிலை முற்றிலும் செய்தது என்று கூறுவதற் கில்லை. மொழியால் குறிக்கப்படவியலாத எண்ணங் களும் உணர்ச்சிகளும் மனிதன்பால் நிரம்ப உள்ளன. அத்தகைய நிலையில் நாம் யாது செய்தல் வேண்டும்? எண்ணத்தை எவ்வாறாயினும் வெளியிட்டுத் தீர வேண்டும். அதுவே சிறப்புடையது. அதுவே உயிர் போன்றது. அது வெளிவருகையில் போர்த்து வரும் உடல் போன்றதே மொழி. உடல்மேல் உள்ள பற்றுக் காரணமாக உயிரை விட்டுவிடலாமா? .