பக்கம்:இன்றும் இனியும்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 அ.ச. ஞானசம்பந்தன் தனித் தமிழிலேயே நமது எழுத்து இருக்க வேண்டும் என்று கூறுவோர் ஒருபுறம். எந்த மொழியைக் கலந்தாயினும் கருத்தை அறிவித்தால் போதும் என்போர் ஒருபுறம். இருவரும் இரண்டு எல்லைகளில் நிற்கின்றனர். நடுநிலையில் நின்று ஆராய்வார்க்கு இருவர் கூற்றும் ஏற்றுக் கொள்ளக் கூடாததாகக் காணப்படும். முதலாவதாகக் கூறப்பட்டோர் கூற்று, மொழி மனிதனின் கருவி என்பதை மறந்தமையால் தோன்றிய தொன்று. அது தவறு என்பதைக் கண்டோம். இனி அடுத்து வரும் கருத்து இதன் மறுதலையாயது. இவர்கள் கருத்தை வெளியிடுவதற்காகத்தான் வேற்று மொழிகளைப் பயன்படுத்துகிறார்களா, அன்றி வேண்டுமென்றே செய்கிறார்களா என்று காண இயலவில்லை. "தமிழ் ஒரு இனிமையான பாஷை, அது ரொம்பவும் ரசிக்கக் கூடியது" இங்ங்னம் கூறுவதால் தான் ஐயம் ஏற்படுகிறது. தமிழ் ஓர் இனிய மொழி, அது மிகவும் அனுபவிக்கக்கூடியதொன்று என்று கூறுவதால் மிகுதியான தொல்லை ஒன்றும் இல்லை. எனவே, முற்கூறியதுபோல் பேசுவதே அவ்வளவு பொருத்தமுடையதாகக் காணப்படவில்லை. நமது கருத்துப்படி எண்ணத்தை வெளியிடுவதே முதற் காரியம். அவ்வாறாயின் எவ்வாறு வெளியிடுவது? நாம் அறிந்த மொழியில் வெளியிட வேண்டும். நாம் அறிந்த மொழியில் உள்ள சொற்கள் நமது கருத்தை அறிவிக்கக்கூடிய வன்மை பெற்றிருக்கும். அங்ங்னம் பெறவில்லை என்றால் நாளாவட்டத்தில் அவை அழிந் தொழியும். நமது எண்ணந் தோன்றுவதற்குக் கருவியாக இருப்பதே தாய்மொழி என்று கூறப்படும். சில