பக்கம்:இன்றும் இனியும்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனித்தமிழ் 79 நேரங்களில் இம்முறை மாறிவிடுகிறது. வேறு மொழியில் மிகுதியும் பழகிய காரணத்தாலும் வேறு மொழியில் தோன்றியுள்ள கருத்துகளை ஆராய்வ தாலும், அதே கருத்தை நாம் வெளியிடும்பொழுது வேற்று மொழிகள் கலக்கின்றன. இங்ங்னம் வேற்று மொழிகளைக் கலக்கையில் அவை இன்றியமையாத வையா என்று துணிய வேண்டும். அறிவியல் கருத்துகளை எடுத்துரைக்கும்பொழுது இத்தகைய இடர்கள் தோன்றுகின்றன. பார்ப்பதற்கு ஒரே கருத்துடையனபோற் காணப்பட்டுப் பல்வேறு பொருட்குறிப்பை உடைய சொற்கள் வேற்று மொழியில் வழங்குகின்றன. நமது தமிழ்ப் பற்றின் காரணமாக அவற்றைத் தமிழாக்குவோம் என்று முற்பட்டால் இடர் ஒன்றுதான் எஞ்சும். கலைச் சொற்களைத் தமிழாக்குவதாகப் புறப்பட்ட பலரும் வடமொழியாக்கினரே தவிரத் தமிழாக்கவில்லை. எனவே, வடமொழியாக மாற்றி அவற்றைப் பயன்படுத்துவதைக் காட்டிலும் நேரடியாக அவற்றை எம்மொழி வடிவத்தோடு நிற்பினும் அப்படியே ஏற்றுக் கொள்ளுதல் தவறுடையதாகாது. அதனால் ம்ொழி வளர்ச்சியும் சிறப்பும் எவ்வாற்றானும் குன்றாது. அறிவியல் நூல்களும் கருத்துகளும் தற்காலத்தில் தோன்றுபவை. அவ்வப்பொழுது நேரும் இன்றியமை யாமைக்கேற்பப் புதிய பெயர்களை இடுகின்றனர். இவற்றுள் பெரும்பாலானவை காரணப் பெயர்கள். இவற்றை அப்படியே எடுத்துக் கொள்ளுதல் நன்று. இது நிற்க, ஏனைய எழுத்துகளில் பிறமொழி கலக்கலாமா என்ற வினாவைச் சற்று ஆராய்வோம். கலப்பு ஏன் ஏற்படுகிறது: கலப்பு இன்றியமையாமை