பக்கம்:இன்றும் இனியும்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 ல் அ.ச. ஞானசம்பந்தன் நோக்கி ஏற்படுமாயின் அதனை ஏற்றுக்கொள்வதில் தவறு ஒன்றுமில்லை. இதனாலும் நமது மொழி வளர்ச்சி குன்றாது. ஆனால், இன்றியமையாமை எப்பொழுது ஏற்படுகிறது? மனம் ஒன்றை நினைக்கிறது; நினைவோ சொல் வடிவில் செல்கிறது. பிறகு நினைவு வெளிப்படுகையிலும் சொல்லாகவே வெளி வருகிறது. நினைவில் பெரும்பாலும் தாய் மொழியே பயன்படுகிறது. ஆனால், அது தூய்மையான தாக இருப்பதில்ல்ை, பழக்கங் காரணமாகப் பிறமொழி களோடு கலந்த தமிழிலே நினைக்கிறோம். எனவே, அதி வெளி வருகையில் அங்கனம் கலந்த வடிவிலேயே வருகிறது. இது முறையா என்பது இரண்டைப் பொறுத்தே இருக்கிறது. முறையன்று என்று ஒர் அளவு வரை கூறலாம். மொழி என்று யாவரும் அறிந்த ஒரு சொல் இருக்க, பாஷை என்று கூறுதல் தவறு. என்ன கருத்தாயினும் அதனைத் தனித்தமிழ்ச் சொற்க ளாலேயே வெளியிடுதல் சாலச் சிறந்தது. மேனோக் காகப் பார்ப்பதற்குத் தமிழ்ச் சொல் ஒன்றுங் காணப்படவில்லை என்று கூறிக்கொண்டு உடனே வேற்றுமொழிக்குச் செல்வதும் சிறப்புடையதன்று. அவ்வாறாயில் காலஞ் செல்லச் செல்லப் பயன்படுத்துவார் இல்லாமல் பல மொழிகள் இறந் தொழியும். எனவே, கூடுமானவரை தமிழ்ச் சொற்களைத் தேடிப் பயன்படுத்த வேண்டும். அவை வழக்காற்றில் மறைந்திருப்பினும் செம்மையான சொற்களாயிருப்பின் அவற்றை மீண்டும் வழக்கில் கொண்டுவர வேண்டும். மொழி வளர்வதற்கு இது ஒரு நல்ல வழியேயாகும். . ஆனால், இங்ங்னஞ் செய்வதற்கும் எல்லையுண்டு இவ்வளவுக்கும் அடிப்படையான கருத்து மாறா