பக்கம்:இன்றும் இனியும்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 அ.ச. ஞானசம்பந்தன் மிகவும் இன்றியமையாத இடங்களில் பிறமொழி ஒன்றிரண்டு வருதலினால் மொழிவளம் மிகுமே தவிரக் குறையாது. எண்ணங்களை வெளியிடும் கருவி மொழி என்பதும், அறிவுடைய ஒருவன் தனது கருவியில் வேற்றுப் பொருள் கலவாது பாதுகாத்தல் போல் மொழியையும் பாதுகாத்தல் வேண்டும் என்பதும், அக் கருவிகட்கு எண்ணெய் முதலியன இடுதல் போலவும், உறை இடுதல் போலவும், மொழி வளர்ச்சிக்கு ஆக்கமான அளவுக்குப் பிறமொழிச் சொற்களை ஏற்றுக்கொள்ளலாம் என்பதும் இன்றைய நிலையில் நடுநிலைமையோடு நோக்குவார்க்குப் புலனாம். -