பக்கம்:இன்றும் இனியும்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 மாணவர்களிடையே படிக்கும் வழக்கத்தை வளர்த்தல் X கல்வி என்ற தமிழ்ச் சொல்லே 'கல் என்னும் பகுதியினடியாகப் பிறந்தது. 'கல் என்றால் தோண்டு' என்று பொருள். எனவே, தோண்டத் தோண்ட மணற்கேணி சுரப்பதுபோல் அறிவின் துணை கொண்டு தோண்டத்தோண்டக் கல்வியும் வளரு மென்பதே கருத்தாகும். கற்காலத்தில் வாழ்ந்த மனிதனுக்கும் இன்று வாழுகின்ற மனிதனுக்கும், மனிதன் என்ற அளவில் பொதுத்தன்மை இருப்பினும், அறிவு நிலையில் மலைக்கும் மடுவுக்குமுள்ள வேறுபாடு இருக்கின்றது. உலகமும், இயற்கையும், உலகப் பொருள்களும் அன்றும் இன்றும் ஒரே மாதிரியாக இருப்பினும் இவ்வுலகத்தையும் அதிலுள்ள பொருள்களையும் மனிதன் காண்கின்ற காட்சியில் வேறுபாடு மிகுதியாகவுளது. அன்றைய மனிதன் பொருளைப் பொருளாகக் கண்டானே தவிர, அதனை ஊடுருவி நோக்கும் சக்தியையும் வாய்ப்பையும் பெற்றிருந்தானில்லை. அறிவு மிகுதியாக வளர்ந்துள்ள இற்றை நாளில் பொருள்களைப் பார்க்கும்பொழுது அதனுடைய புற வடிவத்தை மட்டும் கண்டு அமைதியடையாமல் மனிதன் ஊடுருவி நோக்கவும்