பக்கம்:இன்றும் இனியும்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 அ.ச. ஞானசம்பந்தன் கற்றுக் கொண்டுள்ளான். ஆதலால், உலகில் எல்லாப் பொருள்களும் ஆதிகால மனிதனுக்குத் தந்த காட்சிவேறு இன்றைய மனிதனுக்குத் தருகின்ற காட்சி வேறு. இக் காட்சி வேறுபாடு எதனால் கிடைத்தது? மனிதனின் அறிவு வளர்ந்த காரணத்தால் அவ் வறிவின் துணைகொண்டு, பொருள்களை ஊடுருவி நோக்கும்பொழுது பொருள்களின் தன்மையும் இயல்பும் மாறிவிடுகின்றன. இவ்வாறு சொல்வதால் பொருள்கள் மாறி விட்டன என்பது கருத்தன்று. அப் பொருள்களைக் காணும் மனிதனின் அறிவு வளர்ச்சி காரணமாக, அப் பொருள்களுள் அடங்கியிருக்கும் உண்மைப் பொருளை, தத்துவத்தை இன்றைய மனிதன் காண்கின்றான் என்பதே கருத்தாகும். இங்ங்னம் காண்பதற்குரிய வாய்ப்பை மனிதனுக்கு நல்கியது எது? அது அவனுடைய அறிவேயாம். இந்த அறிவை மனிதன் எவ்வாறு பெற்றான்? கல்வியின் மூலமாகத் தான் பெற்றான். ஆதலால்தான் பொருள்களின் புற வடிவத்தைக் காண்கின்ற கண்களும், அவற்றின் அக வடிவை ஆராய்கின்ற கல்வியும் ஒன்று என்றே வள்ளுவர் கூறிப்போனார். எண்ணும் எழுத்தும் மாந்தர்க்குக் கண்ணென்றே நம் முன்னோர் கூறினர். எனவே, மனிதன் அறிவு படைத்த மனிதனாக வாழ வேண்டுமானால் உலகத்தில் உள்ள பொருள்களை. கேவலம் யானைகண்ட குருடர்களைப்போல் காணாமல், அவற்றின் தன்மையை, இயல்பை, அடிப்படையை உள்ளவாறு காணவேண்டுமானால் கல்வி இன்றியமையாதது என்று புலப்படும். இக் கல்வியைத் தவிர வேறெந்த வழியாலும் மனிதன் உலகத்தைப் பூரணமாகக் காணமுடியாது? உலகத்தை