பக்கம்:இன்றும் இனியும்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணவர்களிடையே படிக்கும் வழக்கத்தை வளர்த்தல் 85 மட்டுமென்ன? இவ் வுலகத்தைச் சூழ்ந்து ஊடுருவி அப்பாற்பட்டு நிற்கின்றதாகிய பரம்பொருளையும் அறிந்துகொள்ள வேண்டுமானால் கல்வி ஒன்றின் மூலமாகத்தான் இயலும். கல்வி என்று சொல்லும்பொழுது ஏட்டுக் கல்வியைமட்டும் நாம் குறிப்பிடவில்லை. அனுபவத் தாற் பெறப்படும் கல்வியும், கேள்வி ஞானத்தால் பெறுகின்ற கல்வியும், அக உணர்வுத் துண்டலால் பெறப்படுகின்ற கல்வியும் கல்வியென்றே அழைக்கப் பெறும். ஏட்டுக்கல்வி, கேள்விக்கல்வி என்ற இரண்டினையும் நாம் அறிவோம். ஆனால், இவை யிரண்டினையும் கடந்த அகவுணர்வுக் கல்வியென்ற ஒன்றும் உண்டு. இயேசுநாதர், ஞானசம்பந்தர், நம்மாழ்வார், இராமகிருஷ்ண பரமஹம்ஸர் போன்ற வர்கள் நம்மைப்போல் ஏட்டுக் கல்வியில் தொடங்கி, கேள்விக் கல்வியில் வளர்ந்து, மூன்றாவதாக உள்ள அகவுணர்வுக் கல்விக்குச் செல்லாமல், நேரடியாகவே அகவுணர்வுக் கல்வியைப் பெற்றார்கள். இதனால் இவர்களை நம் முன்னோர்கள் ஒதாதுணர்ந்த பெரியோர்கள் என்று கூறினார்கள். அதாவது கல்வியை ஒதுவதே பொருள்களை உள்ளவாறு காண்பதற்குத்தான். ஆகவே, உணர்தல் ஆகிய பயனை ஒதுதல் வழியின்மூலம் அடைவது ஒன்று: அவ்வா றில்லாமல் ஒதுதல் ஆகிய வழியை விட்டுவிட்டு உணர்தலாகிய பயனை அடைதலும் உண்டு. மேலே கூறிய பெரியோர்கள் நம்மைப்போல் சாதாரண வழியை மேற்கொள்ளாமல் தீவிரமான வழியை மேற் கொண்ட காரணத்தால் அந்த இரண்டு படிகளின் மூலமாகச் செல்லாமல் மூன்றாவது படியை அடைந்துவிட்டனர். .