பக்கம்:இன்றும் இனியும்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 அ.ச. ஞானசம்பந்தன் இராமகிருஷ்ண பரமஹம்ஸர் போன்ற பெரியவர்களுக்குமட்டும் இவ் வழி உரியதே தவிர, நம்மைப் போன்ற சாதாரண மக்கள் முதலில் கூறியபடி, கற்றல், கேட்டல், சிந்தித்தல், தெளிதல் ஆகிய வழிகளை மேற்கொள்வதன் மூலமாகத்தான் உண்மைக் கல்வியைப் பெற முடியும். அதிலும் பொறிபுலன்கள் சுறுசுறுப்பாகவுள்ள இளமைக் காலத்தில் கல்வியை மேற்கொள்வதைவிடச் சிறந்த காலம் வேறில்லை. சாந்துணையும் கற்கவேண்டும் என்று நம்முடைய பெரியோர்கள் கூறியுள்ளார்கள். என்றாலும் அதனைத் தொடங்குவதற்குரிய நேரம் இளமையேயாகும். வெறும் பாடப் புத்தகங்களை மட்டும் படித்துத் தேர்வுகளில் வெற்றிபெறுவதுதான் குறிக்கோள் என்று மாணவர்கள் நினைத்துவிடக் கூடாது. தேர்வில் வெற்றி பெறுவது முக்கிய மென்றாலும் அதைவிட முக்கியம் இந்த இளமைக் காலத்தில் நிரம்பக் கற்றுப் பிற்கால வாழ்க்கைக்குத் தன்னைத் தயாரித்துக் கொள்ளல் வேண்டும். இன்றைய நிலையில் கல்வி உலகம் விரிந்து நிற்கின்ற சூழ்நிலையைப் பார்த்தால் எந்த ஒருவனும் பிறந்ததிலிருந்து இறக்கின்றவரையில் கல்வி யொன்றையே பொருளாகக் கருதிக் கற்றாலும், ஒரு பகுதியைக்கூட முற்றக் கற்றான் என்று சொல்ல முடியாது. ஆகவே, கலையியல் (Humanitics), விஞ்ஞானம் (Science) என்ற இரண்டும் இன்றைய மனிதனுக்கு இரண்டு கண்கள் போலாகும். ஒரு கண்ணை மட்டும் கூர்மையாகச் செய்துகொண்டு மற்றொரு கண்ணைப்பற்றிக் கவலைப்படாமல் பார்வையிழக்கச் செய்வது மிக மிக வருந்துதற்குரிய ஒன்று. மனிதன் முழு வளர்ச்சி பெற வேண்டுமானால்