பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

109 வந்த 'மித்ர மண்டலி' எனும் அமைப்பு இன்றைய கணனட இலக்கிய மறுமலர்ச்சிக்கு பெருந்தொண்டாற்றிய கவிஞர்கள் எழுத்தாளர்கள் பலர் உருவாகக் காரணமா யமைந்த பாசறையாகும் இவ்வமைப்பு. 'மித்ர மண்டலி' அமைப்பில் மட்டுமல்லாது கோவிந்தபையின் இலக்கிய வாழ்வுக்கே அடியெடுத்துக் கொடுத்து விரைவு நடைபோட வைத்த பெருமை பஞ்சே மங்கேஷ் ராவ் அவர்களையே சாரும் எனில் அது மிகை யாகாது கோவிந்தபை மங்களுர் கல்லூரியில் மாணவரா யிருந்த காலததில் அவருக்கு கல்லூரி ஆசியராயிருக்கும் பேறு பெற்றவா மங்கேஷ் ராவ், ராவின் தூண்டுதலினாம் கோவிநதபை கனனட க் கவிதைகளை இயற்றத் தொடங் கினார் விரைவிலேயே குருவுக்கு மிஞ்சிய சீடனாக அற் புதக் கவிதைப் படைப்புக்கள பலவற்றை உருவாக்கித தன் ஆசிரியரையே வியப்பிலாழ்த்தினார். இவரிடம் மறைந்திருக்கும் கவித்துவப் பெருக்கைத் தன் ஊக்குவிக் கும் திறத்தால் வெளிக்கொணரச் செய்தார் ராவ் இதன விளைவாக வெளி வந்ததுதான 'கிளி விண்டு' எனும் முதல் கவிதைத் தொகுப்பு நூல். இந்நூலை வெளியிடப் பெருந்துணை புரிந்தவரும் பஞ்சே மங்கேஷ் ராவ்தான. மறுமலர்ச்சி எழுத்தாளர்களான பேந்த்ரே. மாஸ்தி கோகக் போன்றவர்களோடு ஒப்பிடும்போது கோவிந்த பையின் படைப்புக்கள் மிகக் குறைவேயெனினும் கருத தாழததிலும் சிந்தனை வளத்திலும் புலமைத் திறத்திலும் அவை எனறும் அழியாமுததிரை கொண்ட இலக்கியச் செல்வங்கள் என்பதில் ஐயமில்லை. கவிதா சக்தியும இறையுணர்வும் நிரம்பப் பெற்ற கோவிந்தபை தாம பிறந்த மண்ணிற்கேயுரிய மரபு வழுவா பழக்கவழக்கங்களில கற்பனைகளில் ஆழ்ந்த பிடிப்பும் தொன்று தொட்டு வரும் சமயச் செய்திகளில்