பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கரபட்ட கடெங்கோட்லு கன்னட இலக்கிய உலகில் 'கடெங்கோட்லு' என எல் லோராலும் அழைக்கப்படும திரு சங்கரபட்ட கடெங் கோட்லு அரை நூற்றாண்டுக்கு மேலாக கன்னட இலக் கிய வளர்ச்சிக்குப் பெருந் தொண்டாற்றிய முது பெரும் எழுத்தாளர் ஆவார். தென் கனனட மாவட்டத்தைச் சார்ந்த கிராமமொன் றில் 1914ஆம் ஆண்டில் பிறந்த கடெங்கோட்லு பள்ளிப் பருவ நாட்களிலேயே இலக்கிய ஆர்வம் மிகுந்தவராக இருந்தார். இளமையிலேயே இலக்கிய உணர்வும். அன்று நாடெங்கும் கொழுந்து விட்டெ ரிந்த தேசிய உணர்வும் இவர் உள்ளத்தே போட்டி போட்டுக் கொண்டு பொங்கி நின்றன. உயர்நிலைப் பள்ளிக் கல்வியை முடித்துக் கொண்டு கல்லூரியில கால் வைக்கும் நேரததில் நாடெங்கும் சூறா வளி வேகத்தில் பரவி வந்த சுதந்திரப் போராட்டத்தில் இவரும் தீவிரமாகப் பங்கேற்க களத்தில் குதிததார் இளமையிலேயே சுதேசி இயக்கத்தில் தீவிரம் காட்டிய இவர் சுதேசிப் பொருள்களை வெறுததொதுக்கும் போராட்டததில் பெரும் அக்கறை காடடினார். அன்றைய வெள்ளையர் கல்வித் திட்டம் இந்தியர் களை அடிமை உணர்வு உள்ளவர்களாக உருவாக்கு கின்றது என்ற கருதது நாட்டுத் தலைவர்களிடையே அழுத்தமாக வேரூன்றியிருந்ததால் தேசியக் கல்விக் கூடங் களை ஆங்காங்கே நிறுவும் முயற்சிகள் தீவிரமாக மேற கொள்ளப்பட்டன தேசிய உணர்வால் உந்தப் பட்ட இளைஞர்கள் வெளளையர் கல்விக் கூடங்களை விடுத்து