பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

123 தெளிவும் பழங்காலத்திய உயர்ந்த இலக்கிய நடையும் கொண்டு திகழ்கினறன பல்வேறு இலக்கியப் பிரிவுகளிலும் தனக்கென ஒரு தனித்துவம் கொண்டு திகழும் இவர் இன்றைய தெலுங்கு புதின இலக்கியத் துறையில் குறிப்பிடத்தக்கத் தனிச் சிறப்புடைய படைப்பாளராக விளங்குகிறார் இதுவரை சுமார் முப்பது புதினங்களுக்குமேல் எழுதி யுள்ளார். மறைந்து வரும் சமுதாயத்தை வருங்கால சந்ததிகளுக்குத் திறம்பட விண்டுரைக்கும் போக்கை இவரது புதினங்களில பரக்கக் காணலாம் சமூகத்தின் பல்வேறு படிகளில் வாழும் மக்களின் வாழ்க்கைப் போக்கு, சிந்தனை, பழக்கவழக்கங்கள், உணர்ச்சிகள் ஆகியவற்றைத் திறம்படக் கதைவழி விளக்கிச் செல்லுவது இவருக்குள்ள தனிச் சிறப்பாகும். இவ்வகையில் அமைந் துள்ள புதினங்களில் தலையாயதாகக் கருதப்படுவது "வேயி படகலு (ஆயிரம் நாகப் படங்கள்) என்ற புதின மாகும். ஆநதிர நாட்டில் இரண்டு, மூன்று தலைமுறை களாக சமுதாயத் துறையிலும் பண்பாட்டுத் துறையிலும் ஏற்பட்ட மயறுதல்களை அழகுறச் சித்தரிக்கும் சிறப்புமிகு புதினமாகும் இது. "செலியலிகட்ட' (சகோதரி ஆணை) 'தர்ம சக்ரமு' (தர்ம சக்கரம்) மதுரையைப் பின்புலமாகக் கொண்டு படைக்கப்பட்ட ஏக வீர' பத்தன்ன சேனானி' (சேனாதிபதி பத்தன்ன) மா பாபு (என் பாபு) முதலிய புதினங்களில் பலவும் பல பதிப்புக்களாக வெளிவந்துள் இiஒ , இவரது புதினங்கள் காணும் மற்றொரு குறிப்பிடத் தக்க அம்சம் இவருக்குள்ள பழமைப் பற்றாகும் எந்த அடிப்படையில் கதையை அமைத்தாலும் அதில் நம் நாட்டின் பழம்பெரும்:நாகரிகத்தின் உயர்வையும் மேலை 9