பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 நாட்டு வாழ்க்கை முறையைப் பின்பற்ற முயல்வோரை யும கணடித்து இந்து தர்மத்தின் உயர்வை நிலைநாட்ட முயலும் போக்கையும் காணலாம். மேற்கத்திய வாழ்க்கை முறையை மட்டுமல்ல இலக் கியப் போககையுமகூட இவா அப்படியே பின்பற்ற விரும்புவதில்லை இதனால் இவரது கதை இலக்கியங்கள் மேனாட்டு கதை இலக்கிய அமைப்பு முறைகளினின்றும் சற்று வேறுபட்டே உள்ளன எனவே, இவரது புதினங்களும் சிறுகதைகளும் இவருக்கேயுரிய தனித்துவப் போககுடையனவாக விளங்கு வதில் வியப்பேதும் இல்லை இவர் நூற்றுக்கணக்கான சிறு கதைகளை எழுதியுள்ளார். இவரது சிறுகதை இடம் பெறாத சிறுகதைத் தொகுப்பு நூல்களே இல்லையென க்லாம். கவிதை இலக்கியத் துறையில் பழம் பெரும் கவி மன்னர்களாகத் திகழும் நன்னய்ய, திக்கன்ன போன் றோர்க்கு இணையாக இக்காலத் தெலுங்குக் கவிதை யுலகம் போற்றும் விசுவநாதா ஆந்திர மக்களால் கவி சாம்ராட்" என்ற சிறப்புப் பெயரால் அழைத்துப் போற் றப்படுகின்றார். இவர் தமது கவிதைப் படைப்புக்களில் பழங்கால இலக்கிய நடையையும் உத்தியையும் கை யாண்ட போதிலும் இக்காலத் தெலுங்கு மக்களின பேச்சு மொழி மரபையும் திறமபடக் கையாண்டு கவிதை புனைந் துள்ளார். கற்பனை வளமிக்கக் கவிதைகளும், ஆழ்ந்த சிநதனை களைத் தாங்கி வெளிவரும் செய்யுட்களும் பாவமிக்க இசைப்பாடல்களும் எளிய தடையில் உணர்ச்சிச் சித்திரங் களாக அமைந்து படிப்போரைக் களிப்பிக்கின்றன.