பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

129 எண் ணிப் பார்க்க வேண்டும் என்கிறார். பயனற்ற பழமைப் போக்குகளை கைவிடத் துடிக்கும் கவிஞர், இலக்கிய உலகின வீண சம்பிரதாய கவிதை அமைப்பு களையும் வழி வழியாக வந்த கீத சந்த முறைகளையுப. எதுகை மோனை போன்ற இலக்கணக் கட்டுக்கோப்பு கசுையும் மாற்றியமைக்கவோ உதறித் தள்ளவோ தயக்கம் காட்டியதில்லை. "முற்போக்கு என்ற போர்வையைப் போர்த்திக கொண்டு வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் பழமைக்கு வால் பிடிக்கும் பிற கவிஞர்களைப் போலன்றி எணணத திலும் எழுத்திலும் இடையறாது முற்போக்கு உணர்ச்சி யுை ஊட்டுவதன்மூலம் ஆநதிர மக்களின் உள்ளததில் நிரந்தர இடம்பெற்றிருக்கும் மக்கள் கவிஞராவார் இன்றைய தெலுங்குக் கவிதையுலகின் முற்போக்கு அணியின் வழிகாட்டியாகத் திகழும் பூரீ.பூர். 1910ஆம் ஆண்டு விசாகப்பட்டினத்தில் பிறந்து, விசாகையிலும், பின்னர் செனனை கிருத்துவக் கல்லூரியிலும் பயின்று பி.ஏ. பட்டம் பெற்றவர். எட்டு வயதிலேயே கவிதை புனையத் தொடங்கி விட்ட அவர் தம் பதினைந்தாம் வயதில் பரிணய ரஹஷ் யாலு (காதல் இரகசியங்கள்) என்ற பெயரில் துப்பறியும் புதினமொன்றை எழுதினார். ஆயினும் இயற்கையிலேயே கவித்துவ உள்ளம் படைத்த அவர் பின்னர் தம் முழுக் கவனத்தையும் கவிலை இயற்றுவதிலேயே செலுத்தினார். அக்காலத்தில பெரும் செல்வாக்குப் பெற்றுத் திகழ்ந்த கதைப்பாடல் அமைப்பில் பல கவிதைகளைத் தொகுத்து 1928இல் பிரபல' (தோற்றம்) என்ற பெயரில் வெளியிட் டார். அக்காலப் போக்குக்கேற்ப இக்கவிதைகள் அமைத் திருந்தன. ஆனால், 1935ஆம ஆண்டிற்குப் பின்னர்தான் அவர் தனககென தனியானதொரு பாணியை வகுத்துக்