பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 கொண்டு புதுமைக் கவிதைகளைப் படைக்கலானார். 1950இல் அவரது சிறநத கவிதைப் படைப்பான 'மகா பிரஸ்தான' (சிறந்த புறப்பாடு) வெளியிடப்பட்டது. இந் நூல் தெலுங்குக் கவிதையுலகில் ஒரு பெரும் மாற்றத்துக்கு வழி வகுததது. உணர்ச்சி கொப்பளிக்கும் ஆற்றல்மிக்க அக்கவிதைத் தொகுப்புமூலம் இளைஞர்களுக்கு ஒரு இலட்சிய உலகைக் காட்டியதோடு அதை நோக்கி நம்பிக் கையோடு முேைனற இளைஞர்களை ஊக்கித் தூண்டி னார். தொடர்ந்து முற்போக்குப் புதுமைக் கவிதைகளை இயற்றி தெலுங்குக் கவிதையின போக்கையும் கருத்தை யும் அடியோடு மாற்றியமைத்து விட்டார். முற்போக்கு உணர்வு படைத்த எழுத்தாளாகளும் இளங்கவிஞர்களும் இவரது தலைமையின் கீழ் அணி திரண்டனர். இவரது கவிதைகள் மக்களிடையே பெரும் புகழ் பெற்றது. இவரது கவிதையாற்றலுக்குக் கட்டியங்கூறும் கவிதைப் படைப்புகள் தேச சரித்ராலு (நாடுகளின் வரலாறு) மானவுடு (மனிதன்) முதலியனவாகும். இவர் ஆங்கிலம், ஃபிரெஞ்சு ஆகிய இரு மொழிகளின் தற்காலக் கவிதைகளோடு நெருங்கிய தொடர்பு கொண்டி ருந்ததால் இவரது கவிதைகளில் அவ்விரு மொழிக கவிதைகளின் செலவாக்கு மிகுதியும் பிரதிபலிக்கக காண லாம். சான்றாக இம்ப்ரஷனிசம், ஹியூமானிசம், சர்ரிய லிசம் போன்ற பல புது முறைகளை அவர்தம் கவிதைகளி னுாடே காணலாம். இவர் தம் கவிதைகளில் பலவற்றை ஆங்கிலத்தில் தாமே மொழிபெயர்த்து 'த்ரி சியர்ஸ் டு மேன" (Three cheers to Man) என்ற பெயரில் வெளியிட்டுள்ளார். இதன் வாயிலாக அவர்தம் புகழ் ஆந்திராவுக்கு அப்பாலும் பரவியுள்ளது. மற்றும் அவரது சிறந்த கவிதைகளில் பல