பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொடவடிகண்டி குடும்ப ராவ் ஆந்திர மாநிலத்திற்கு அப்பாலும நன்கு அறிமுக மாகியுள்ள ஒரு சில தெலுங்கு எழுத்தாளர்களுள குறிப் பிடததக்கவர் திரு கொடவடிகண்டி குடும்ப ரால் அவர் கள். தெலுங்கு புததிலக்கியத் துறையின் ஆந்திர சரத் சத்திரராக மதித்துப் போறறப்படும் திரு குடும்ப ரால் புதினப் படைப்பாளர், சிறுகதையாசிரியர். பததிரிகை யாளர், நாடகாசிரியர் எனப் பல்வேறு இலக்கியத் துறை களிலும் தனி முத்திரை பதித்துப் புகழ்பெற்றவர் இவரது இலக்கிய நோக்கும் எழுதத் தேர்ந்தெடுக்கும் கருப்பொருளும் கதை சொல்லும உத்தியும் தனிப்போக் கில் அமைந்தவைகளாகும் இதற்கு இளமையிலேயே இவர் உள்ளத்தில விததிட்டவை கார்ல மார்க்ளின சிந்தனை களேயாகும். கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே சிறுகதைகள் பல வற்றை எழுதிய குடும்ப ராவ் காசி இந்துப் பல்கலைக் கழகத்தில் அறிவியல் பாடத்தில் முதுகலைப் பட்டம் (எம்.எஸ்சி,) பெறுவதற்காகச் சென்றபோதுதான் இவர் கார்ல் மார்க்ஸின மூலதனம்' நூலைப் படிக்க நேர்த்தது. மார்க்ளின் கருத்துக்கள் அவா சிந்தையைக் கவர்நததோடு இவரது சமுதாய நோக்கையும் பெருமளவுக்கு மாற்றி விட்டன. அதுவரை படைப்பாசிரியன என்ற முறையில் அவருக்கிருந்த சமுதாயப் பார்வை புதிய கோணத்தில் அமைந்தது. சமுதாயத்தின பிரத்தியட்ச நிலைமையின் போக்குகளை கழுகுக் கண்களால் கண்டறிந்து அவற்றை எழுத்து வழி விணடுரைக்கும் போக்கில் தன் எழுத்தோவி யங்களை வரையத் தொடங்கினார். இதன்மூலம் இவரது