பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 "ரைவல்ஸ்'முதலிய படைப்புக்களையும் ரஷியக் கதைகள் சிலவற்றையும் தெலுங்கில் மொழி பெயர்த்துள்ளார். இலக்கிய நூல்களோடு அறிவியல் நூல்கள் பலவற்றை யும் இவர் தெலுங்கில் பெயர்த்துள்ளார் இவரது இம் மொழிபெயர்ப்பு நூல்கள் எளிமையும் தெளிவும் கொண்டு மூலநூலைப் படிப்பது போனற உணர்வை உண்டாக்கும் வண்ணம் அமைந்திருப்பதைக் குறிப்பிடத்தான வேண் டும. இவர் தொடக்க காலத்தில் பம்பாயிலுள்ள உலோகத் தொழிறகூடமொன்றில ஃபோர்மேனாகவும் பின்னர் மற் றொரு உலோக-எஃகுத் தொழிற்சாலையின் மேற்பார்வை யாளராகவும் பணியாற்றியுள்ளபோதிலும் இவரது திறமையை எழுத்துலகமே முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டது. தெலுங்கு இலக்கியவுலக வளர்ச்சிக்குப் பெருந்துணை யாயமைந்த 'நவ்ய சாஹிதய பரிஷத்தில் பெரும் பங்கு கொண்டு உழைத்த இவர் முற்போக்குத் தெலுங்கு இலக் கிய அமைப்புகள் பலவற்றில் தொடர்பு கொண்டு உழைத்து வந்துள்ளார். சமதர்ம சமுதாய உணர்வு படைத்த முறபோக்கு எழுத்தாளரான திரு குடும்ப ராவ் சிறு சிறு வடிவங்களாக கதைகளை உருவாக்குர 'கல்புகா புதிய இலக்கிய வடிவ மொன்றை தெலுங்கு இலக்கிய உலகின வாசர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற இப்புது அமைப்பில் உரு வாகும் கதைகளை இதழ்கள் பலவும் வெளியிட்டுள்ளன. மற்ற எழுத்தாளர்களோடு ஒத்துப்போகும் தன்மை இவரிடம் சற்றுக் குறைவாகக் இருந்தபோதிலும் தனக் கென தனி வழிவகுததுக் கொண்டு இடையறாது பணி யாற்றி வந்த இவரது இலக்கியத் தொண்டு தெலுங்கு இலக்கிய வரலாற்றில் என்றென்றும் போற்றப்படும் என்பது திண்ணம்.