பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16.1 பின் உண்மைக் கூறுபாடுகளை உணர்த்திப் புத்திலக்கியப் பேரார்வ வளர்ச்சிக்கு ஆக்கம் தேடினார். புதிய இலக்கிய மரபுகளை அடியொற்றி ஏராளமான தெலுங்கு இலக்கி யப் படைப்புக்களை முனைந்து உருவாக்கிக் குவிததார். இன்றைய தெலுங்கு இலக்கியத் துறையில் புகழ் பெற்ற கவிஞர்களாக விளங்கும் விஸ்வநாத சத்திய நாராயண, ராயப்ரோலு சுப்பாராவ், கிருஷ்ண சாஸ்திரி போன்றவர்களுக்கு அனறு தெலுங்குக் கவிதைத் துறை யில் புத்துணர்வூட்டும் வழிகாட்டி இலக்கியப் படைப் பாக அமைந்தது சிவசங்கர சுவாமியின், ஹ்ருதயேஸ்வரி எனும் கவிதைத தொகுப்பேயாகும. ஒத்த மனமும் உணர்ச்சியும் வாய்க்கப் பெற்றவைகள் என்றுமே ஒன்று படுவதில் பேரார்வமுடையவர்கள் என்பதை அழகுறச் சித்தரிக்கும் கவிதை நூலாகும் இஃது. இவரது படைப்புகளுள் குறிப்பிடத்தக்க மற்றொரு பெருமபடைப்பு 'பத்மாவதி சரண சாரண சக்ரவர்த்த" எனும் முழு நீளக் கவிதை நாட மாகும். தெலுங்கு கவிதை நாடகங்களிலேயே தலை சிறந்ததெனக் கருதப் படும் இந்நாடகம் நாடக அரங்குகளிலும் பல முறை வெற்றி நடை போட்டு புகழை ஈட்டியுள்ளது. வரலாற்று புகழ் பெற்ற சமஸ்கிருதக் கவிஞராள ஜெயதேவாவுக்கும் நடனமங்கையான பத்மாவதிக்குமிடையே இரு ந் த காதலையும் அக்காதல் "கீத கோவிந்தம்’ எனும் அமர காவியத்தை உருலாக்க எவ்விதம் தூண்டுகோலாய மைந்தது என்பதையும் காவியச்சுவை நனி சொட்டச் சொட்ட விவரிக்கிறது இக்கவிதை நாடகம் இவரது குறிப்பிடத்தக்க மற்றொரு நூல் வகுல மாலிக (மகிழ மாலை) எனும் காவியம் ஆகும் இஃது உருவக அடிப்படையில் அமைந்த காவியம் ஆகும். தான் அழகு செய்த காதலொருலனைப் பற்றி அவன் மார்பை