பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 சாஹித்ய பரிஷத்தின் தலைவராகவும் இந்திய சா கி ந் தி ய அக்காதெமியின் ஆலோசகராக வும். ஆத்திரப் பிரதேச சாகித்திய அக்காதெமியின் செயற்குழு உறுப்பினராகவும் பணியாற்றியுள்ள இவரது இலக்கியத் தொண்டை போற்றும் வகையில பல விருதுகளை தெலுங்கு இலக்கிய உலகு வழங்கி பாராட்டி யுள்ளது. 1924ஆம் ஆண்டிலேயே விஜய நகர ஆராய்ச் சிப் பல்கலைக் கழகம் கவிபூஷணா” எனற பட்டத்தையும் 1938இல் த்ரிலிங்க வித்யா மஹாபீடம் சாகித்ய ஸ்தாபக' என்ற விருதையும் அளித்து கெளரவித்துள்ளது. சுமார் முப்பதுக்கு மேற்பட்ட நூல்களை தெலுங்கில் வடித் துள்ள இவர் பங்கேற்காத தெலுங்கு இலக்கிய அமைப்பு களே இலலை எனலாம். "மிஸ்ரமஞ்சரி' என்ற இவரது உணர்ச்சிப் பாடல் கவிதை தொகுப்புக்கு 1966ஆம் ஆண்டு சாகித்திய அககாதெமி பரிசளித்துப் பாராட்டி யுள்ளது.