பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 கேசவ தேவின் சொந்த வாழ்க்கையின் அனுபவச் சாயலை நடி' (நடிகை) எனற படைப்பின மூலம் நாம் அறிந் துணர முடிகிறது நாடகத் துறையோடு நீண்ட கால நெருக்கம் கொண்டிருந்த தேவ் அத்துறையிற் கானும் தீமைகளையெல்லாம் தம் சொந்த அனுபவ முததிரை யோடு வாசகர்களுக்கு உணர்த்துகிறாா. கலைத்துறை யினர் பின்பற்றும தவறான மரபுகளாலும் மாறறத்தை வெறுப்பதனால் அத்துறை படும் அல்லலகளையும பணத தாசை கொண்ட நாடகக கம்பெனி முதலாளிகள் பணம பண்ணும் கருவியாகக் கலையை மாற்றுவதன மூலம் கலையின் தரத்தையே தாழ்ததி நாசமாக்குவதையும் அருமையாக விளக்குகிறார் வாழ்க்கைச் சுழற்சியில் மின்னல வெட்டுப்போல் பட்டுத் தெறிக்கும் வாழ்க்கையின் சிறு சிறு அசைவுகளும் கூட கேசவ தேவின் எழுததுருவில் ஜீவ களையோடு வெளிப்பட்டு இலக்கியத் தகுதியைப் பெற்றுவிடுகின்றன. வெறும் ரொமாண்டிக் போக்கில் கதைக கருவை அமைக் காது "ரிய லிச'ப் போக்கிலேயே கதையை நடத்திச் செல்வ தின மூலம் 'ஒடையில் நினுை' போன்ற படைப்புக்கள புதினத்திற்குத தேவையான எல்லா அம்சங்களையும் பெறாமற்போனபோதிலும் தேவ் கூறவந்த செய்திகளை முழுமையாக சித்தரிக்கத் தவறவில்லை. கதையமைப்பில் காட்டும் கவனத்தைவிட அக்கதை வழி உணர்த்த வேண்டிய எண்ணங்களிலும் உணர்ச்சிகளி லுமே அதிக சிரத்தை காட்டுகிறார் எனறு கூடக் கூற லாம். ஏனெனில் அவரது படைப்புக்கள் இலக்கியத் தகுதி ஒன்றினை மட்டுமே வேண்டி உருவானவைகளல்ல என் பதை அவரே ஒரு சமயம் 'நான் எழுதுவதெல்லாம் இலக்கியமாகி விடவேண்டும் என்று எணணிக் கொண்டு எழுதுவதிலலை ஒரு எழுத்தாளன் ஆக வேண்டும் என்றும் நான் ஆசைப்பட்டதில்லை. நான் எழுதுவது இலக்கியம்