பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 என்ற பெயரில் மற்றுமோர் புதினத்தையும் எழுதியுள் ளார் ஏழைக் கிருஸ்துவ மக்களின் வாழ்க்கையும் அவர்கள் மீது தேவாலயத் திருச்சபைக்குள்ள செல்வாக்கையும் விளக்குகிறது இப்புதினம. இவர் சிறுகதைகள் பலவற்றை யும் எழுதியுள்ளார். அவைகள் மூன்று தொகுதிகளாக வெளிவந்துள்ளன. மாக்ஸிம் கார்க்கியின வாழ்க்கை வர லாற்றையும் ரஷ்ய நாட்டின் வரலாற்றையும் எழுதியுள் ளார். "ஒட். தோட்டத்தில்" (ஒரே பார்வையில்) என்ற சுவை நிறைந்த பயண நூலையும் "சீனா முன்னோட்டு' (சீனாவின் முனனேற்றம்) "மதம் அவிடேயும் இவிடே யும்' (சமயம் அங்கும் இங்கும்) போன்ற நூல்கள் இவரது அயல்நாட்டு அனுபவங்களை அழகுற விளக்குகின்றன. தமது சொந்த வாழ்க்கை அனுபவங்களையும் சுவையாக விளக்கும் நூல்கள் சிலவற்றையும் எழுதியுள்ளார் அவை களுள் குறிப்பிடத்தக்கன "கொழிஞ்ச இலைகள்' (உதிர்ந்த இலைகள்) "மங்காத ஒர் மகள' (மங்காத நினைவுகள்) ஆகியனவாகும். பேராசிரியர் முண்டசேரி எழுதிய நூல்கள் அனைத் திலும் அவருக்கு நிலையான புகழைத் தேடித் தருபவை அவர் திறனாய்வு பற்றி எழுதியுள்ள பத்திற்கு மேற்பட்ட நூல்களேயாகும். கல்வித்துறை நிபுணர் சமூகவியலாளர் சீர்திருத்த வாதி முற்போக்கு எழுத்தாளர் அரசியல்வாதி என்ற பல் வேறு துறைகளிலும் இவரது பணி பரவிக் கிடந்தபோதி லும் ஒட்டுமொத்தமான நிலையில் இவர் மலையாள இலக்கிய உலகில் தலைசிறந்த ஒர் இலக்கியத் திறனாய் வாளர் என்ற மகுடததாலேயே மதித்துப் போற்றப்படு கின்றார் இவரது வாழ்க்கை முழுவதும் நிழல்போல் தொடர்ந்து கொண்டிருப்பது இவரது திறனாய்வுணர்வே என்பதை வாழ்க்கை வரலாறே நன்கு விளக்குகிறது.