பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39 ராமாயணம், பாரதம் முதவிய இதிகாச இலக்கியக் கூறு களையே மீண்டும் மீண்டும் சளைககாமல் பாடும் மரபுக் கவிஞர்களும் பெருமளவில் இருக்கவே செய்கிறார்கள். புதுமை வேட்கையுடன் சமூகத்தில் வேரூன்றியிருக்கும் சாதி மத பேதங்களையும் பொருளாதார ஏற்றத் தாழ்வு களையும் அரசியல்வாதிகளின் சுயநலப் போக்குகளையும் மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி அவர்களைச் சுரண்டி வாழும் எத்தர்களின் தீய நடவடிக்கைகளையும் சாடத் துடிக்கும் இப்புதுமைக் கவிஞர்கள் சில சமயம் எல்லை கடந்து தங்கள் எழுதுகோலை ஒடவிடுவது நல் லோர்களின் உள்ளத்தைப் பெருமளவில் புண்படுத்துவ தாகவும் அமைந்து விடுகிறது. வரம்பு மீறி பெரியார் களை-முன்னோர்களை கேலியும் கிண்டலும் செய்யும் இவர்தம் மனப்போக்கை நம்மால் ஜீரணித்துக் கொள்ள முடியாமற் போய்விடுகிறது. சான்றாக ஒரு கவிதையில. 'புத்தனே நீயும் உன் பொறுமையும் எனக்கு வேண்டாம்; நீ யொருவனே போதியின் கீழ் செத்துப்போ' எனக் கூறுகிறார். இத்தகைய கவிதைகளைப் பார்க்கும்போது நமக்கு வெறுப்பும் கசப்பும் ஏற்பட்டாலும், மக்களிடையே குறிப் பாக இளைய தலைமுறையினரிடையே இக்கவிதைகளுக்கு இன்னும் பெரும் செல்வாக்கு இருக்கவே செய்கிறது. பொதுவுடமைச் சிந்தனையின் அடிப்படையில் சமூக மாற்றம் காண விழையும் புதுமைக் கவிஞர்கள் "அப்புடய கவுலு" என்ற பெயரிலும், தான் தோன்றித்தனமாக சமூகக் கோணல் நிலைகளை நேரடியாகவும் கொச்சை யாகவும் சாடத் துடிக்கும் இக் கவிஞர்களை "திகம்பர கவுலு" என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறார்கள். முக்