பக்கம்:இன முழக்கம்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 என் ஆசை மனைவி நெல்லைத்தின்ற தாயின் பாலைக் குடித்திருக்கும் என்பதற்காக என் அன்புக் குழந்தை ஆகியோரைக் கொடுவாளால் வீசிக் கொலை புரிந்தேன். அதன் பிறகுதான் என் குற்றத்தை மன்னித்து கொன்றையணி செஞ் சடையார் காட்சி அளித்தார்." கோட்புலி நாயனார் இப்படிப் பக்தர்கள் தங்கள் தியாகங்களைக் கூறிப் பெருமிதங் கொண்டனர். பெருமூச்சு விட்டனர். "உங்களுக்கும் ஆகஸ்ட் தியாகிகளுக்கும் வித் தியாசமில்லையப்பா" என்ற திடீர்க் குரல்கேட்டு, பேச வாயெடுத்த கண்ணப்பர் நிறுத்திவிட்டார். எல்லோரும் திரும்பிப் பார்த்தனர். ஒரு வாலிபம் மறைந்த மங்கையின் தோளில் கை போட்டபடி ஒரு பூனூல்கார அய்யர் நின்றார். எல்லா பக்த சிரோன்மணிகளும் அவர் வாயைப் பார்த்தபடி இருந்தனர். அந்த அய்யர் பேசினார். வா "நீங்கள் எல்லாம் மோட்ச லோகம் பெரிய பெரிய தியாகம் செய்ததாகப் பெருமை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன_முழக்கம்.pdf/19&oldid=1701734" இலிருந்து மீள்விக்கப்பட்டது