பக்கம்:இன முழக்கம்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முரசறைவாய் 'வாளை எடு! வாழ்வா? சாவா? என்பதைப் போரில் புரிந்து கொள்வோம்" என்பதற்கு மட்டு மல்ல. "வாழ்விலோர் திருநாள்" பாடி, வளமார் நாட்டை வாழ்த்திடவும் முரசு முழங்குவதுண்டு. ச அந்நாள் ஆண்ட மறத்தமிழன் கனகனையும் விச யனையும் களத்தினில் சந்திப்பான். போர்முரசு கொ ட்டிப் புலிப்பாய்ச்சல் நடத்துவான். அந்த ஆரிய மன்னர் சிரம் நொறுங்க, கண்ணகி சிலைக்குக் கல் லேற்றிசிங்க நடை போட்டு வருவான். ரத்தம் படிந்த வெற்றி முரசின் ஒலியும், 'வாழ்க தமிழன்' என்ற கீதமும் இமயத்தில் எழுந்து, விந்தியத்தில் எதிரொ லித்து, கன்யா குமரியின் கடலோசையில் கலக்கும். வாடிக் கிடந்த காதலியை வெற்றி முரசம் துள்ளி யெழச் செய்ய - புதுத் துடிப்பால் பூரித்த இசயங் காட்டி பொன்னழகி வழிபார்த்து நிற்க 'தென்றலே! என்னைத் தேடித் துவண்டாயோ?' என்று காளை, வாய் திறப்பதற்குள்... மணவாளன் மார்பினி வந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன_முழக்கம்.pdf/25&oldid=1701740" இலிருந்து மீள்விக்கப்பட்டது