பக்கம்:இன முழக்கம்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35 குண்டுகளை அளித்தது. காந்தியார் அகிம்ஸைக் காகப் பாடுபட்டார்....... அதில் அவர் வெற்றிய டையவில்லை என்பதற்கு கோட்சேயின் கோரச் சிரிப்பு சான்று! காந்தியார், உண்மை - சத்தியநெறி இவைகளைப் போதித்தார். அதில் அவர் தோல்வியுற்றார் என் பதற்குச் செய்திகளைத் திரித்துப் போட்டு அராஜ கத்தைக் கிளப்பிவிடும் இந்து மதத்தின் ஏடுகள் சான்று! காந்தியார், இந்து முஸ்லீம் ஒற்றுமைக் காகப் பாடு பட்டார்-அதிலும் அவருக்கு வெற்றி இல்லை என்பதற்குப் பாகிஸ்தான் பகிர்ந்து அளிக்கப் பட்டதே சான்று. காந்தியார் அமை திக்கு வழி கோலினார்....... அதிலும் அவர் ஆறு தல் பெறவில்லை என்பதற்கு நாட்டிலே பெருத்த கலகங்கள் சான்று! காந்தியாரின் வெற்றிப்பாதைகளிலே முட்டுக் கட்டையாக நின்றது எது எது ?...... எது ? எது ?....... மதம்! மதவெறி! இந்த வெறி ஒரு விடுதலை வீரரை வீழ்த்தியது..... இந்த மதத்தைப் பழிக்குப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன_முழக்கம்.pdf/36&oldid=1701757" இலிருந்து மீள்விக்கப்பட்டது