பக்கம்:இயந்திரவியல் கலைச்சொற்கள்.pdf/4

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர் - 613 005

முனைவர் இ.சுந்தரமூர்த்தி துணைவேந்தர்

அணிந்துரை

பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்தியாவில் ஐரோப்பியக் கல்வி முறை அறிமுகமாயிற்று. 1770-1780-ஆம் ஆண்டுகளில் தஞ்சை, இராமநாதபுரம், இலங்கை ஆகிய இடங்களில் ஸ்வாட்ஸ் (Schwartz) பள்ளிகள் தொடங்கப்பட்டு, இந்தியர்களுக்கு ஆங்கிலம் கற்பிக்கப்பட்டது. 1817இல் கல்கத்தாவில் இந்துக் கல்லூரியும் 1921இல் பம்பாயில் எல்மின்ஸ்டன் இன்ஸ்டிடியூட்டும் தோன்றி ஆங்கிலக் கல்வியை வளர்த்தன. அக்கால ஆங்கிலக் கல்வி முறைக்கேற்பப் பாடத்திட்டம் வகுக்கப்பட்டது. பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் அடிப்படை அறிவியல் பாடங்களும் மானிடவியல் பாடங்களும் ஆங்கிலவழியே கற்பிக்கப்பட்டன. பின்னாளில், தமிழகத்தில் தமிழ் வழிக்கல்வி பற்றிய சிந்தனை தோன்றியது.

தமிழில் அறிவியல் மற்றும் மானிடவியல் பாடங்களைக் கற்பிக்கும் சூழ்நிலை ஏற்பட்ட பின்னர் நூற்களும் கட்டுரைகளும் வெளிவரத் தொடங்கின. கலைச்சொற்களை உருவாக்கிக் கருத்தைத் தெளிவுறுத்தும் நிலைகளும் தோன்றின.

தமிழிலே அறிவியல் கருத்துக்களைக் கூறும் முயற்சி 1830ஆம் ஆண்டு முதலாகவே மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது. செய்தி இதழ்கள் மூலமாகவும் நூல்களின் பின்னிணைப்பாகவும் பரவிய கலைச்சொற்கள் பின்னாளில் கலைச்சொல் தொகுதிகளாக வெளிவரத் தொடங்கின. 1932 ஆம் ஆண்டில் சென்னை அரசு முதன்முதலில் கலைச்சொற்களைத் துறை வாரியாகப் பிரித்துப் பல தொகுதிகளாக வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து பல தமிழ்ச் சங்கங்கள், கலைச்சொற்குழுக்கள், தனியார் நிறுவனங்கள் போன்றவற்றின் மூலம் பல கலைச்சொல் தொகுதிகள் வெளிவந்தன.

1973ஆம் ஆண்டில் தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம்