பக்கம்:இயந்திரவியல் கலைச்சொற்கள்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
முன்னுரை

1982இல் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அறிவியல் தமிழ் வளர்ச்சித் துறையிலே அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொற்களைத் தொகுக்கும் பணி தொடங்கியது. பேராசிரியர் முனைவர் இராமசுந்தரம் அவர்கள் தலைமையிலே செயலாற்றிய இந்தத் துறையில் கடந்த ஆண்டுகளில் பங்வேறு கலைச்சொல் தொகுதிகள் வெளிவந்தன. இத்துறையின் முதற்கட்டப் பணியாகப் பொறியியல் கலைச்சொற்களும் மருத்துவக் கலைச்சொற்களும் தொகுக்கப் பெற்றன. அந்த வகையில் பொறியியல் கலைச்சொற்களைத் தொகுக்கும் பணி என்னால் மேற்கொள்ளப்பட்டது. ஓராண்டுக் கால அளவில் கட்டடவியல், இயந்திரவியல் இயந்திரப் பொறியியல், மின்னியல் மற்றும் மின்னணுவியல் ஆகிய பொறியியல் துறைகளுக்கான சொற்கள் தொகுக்கப் பெற்றன. அவற்றுள் இயந்திரவியல் இயந்திரப் பொறியியல் கலைச்சொற்களே இந்தத் தொகுப்பு நூலில் இடம்பெறுகின்றன.


இயந்திரவியல், இயந்திரப் பொறியியல் என்ற இக்கலைச் சொல் தொகுப்பில் ஏறத்தாழ 6000 கலைச்சொற்கள் உள்ளன. அதுகாறும் வெளிவந்த கலைச்சொல் தொகுப்புகளில் உள்ள கலைச்சொற்கள் இத் தொகுதியில் இடம்பெற்றுள்ளன. அதாவது 1969-இல் வெளிவந்த கிண்டி பொறியியல் கல்லூரியின் தமிழ் மன்ற வெளியீடான கலைச்சொற்கள் முதல் 1981 வரையிலும் வெளிவந்த கலைச்சொல் தொகுதிகள் அனைத்தும் இத்தொகுப்பிற்குப் பயன்படுத்தப்பெற்றன. தமிழ்நாட்டுப் பாட நூல் நிறுவனம், தமிழக அரசின் பல்வேறு தொழில்நுட்பத் துறைகள், பொறியியல் கல்லூரிகளின் தமிழ் மன்றங்கள் முதலான பல்வேறு நிறுவளங்களின் வெளியீடுகளிலுள்ள ஏறத்தாழ 6000 ஆங்கிலக் கலைச்சொற்கள் தொகுக்கப்பெற்றன. மேற்குறிப்பிட்ட வெளியீடுகளுள் கலைச்சொல் தொகுதிகள் மட்டுமன்றி அறிவியல்