பக்கம்:இயற்கை விளக்க வாசகம்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(42) உன்னிடத்திலிருந்து அல்லவா தண்ணீர் என்னிடம் வருகிறது. நான் கலக்குகிற தண்ணீர் உன்னிடம் எப்படி வரும் என்று ஆடு பயத்து அதற்கு பழமொழி சொல்லிற்று, "ஆறு மாதத்திற்கு முன்னே நீ என் என்னைத் திட்டினாய் என்ற ஓநாய் பறபடி ஆட்டுக்குட்டி யைக் கேட்டது. ஆட்டுக்குட்டி நடுநடுங்கி, "மயோ! நான் பிறந்து இன்னும் மூன்று மாதங்கூட ஆக வில்லையே என்றது. நீ திட்டாவிட்டாலும் உன் பாட்டனாவது என்னைத் திட்டியிருப்பான் என்று சொல்லி ஓநாய் அந்த ஆட்டுக்குட்டியைப் பிடித்துக் கொன்று தின்று விட்டது. ஒருவன்மேல் சிறிதும் குற்றம் இல்லாமல் இருந்தாலும், பொல்லாதவர்கள் இப்படித்தான் வீணான பழி சொல்லி அவனை வருத்தப்படுத்து வார்கள்.