பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/11

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

சுந்தர சண்முகனார்


மொழிக்கு (இலக்கியத்திற்கு) இலக்கண நூல்கள் தோன்றின. இலக்கணம் அறியாத கல்வியை ஒரு கல்வியாக அறிஞர்கள் கருதுவதில்லை. இங்கிலாந்தில் உள்ள தொடக்கப்பள்ளிகட்கு Grammar Schools (இலக்கணப் பள்ளிகள்) என்ற பெயர் சூட்டப்பட்டதாம்.

பல்வேறு தொழில் பள்ளிகளில் கற்றுத் தருவதற்காக எழுதப்படும் நூல்களையும் இயல் தமிழில் ஒருவிதமாக அடக்கலாம். பண்டு பல்வேறு தொழில்களையும் கலைகளையும் பற்றிய செய்திகளும் பாடல்களாகவே எழுதப்பட்டுள்ளமை ஈண்டு ஒப்பு நோக்கத்தக்கது.

ஆடல் பாடல்களையே மிகுதியாகச் சுவைத்து வந்த மக்களிடையே, இயல் தமிழையும் சுவைக்கும் பழக்கம் இப்போது பெரிதும் காணப்படுகிறது. சிலருக்கு இட்லி-தோசைக்குத் தொட்டுக் கொள்ள, குழம்பு - சாம்பார் - கொசுத்து - கடப்பா - வெங்காயச் சட்னி கொத்துமல்லிச் சட்னி - தேங்காய்ச்சட்னி - சர்க்கரை - ஆகியவற்றுள் சில பிடிக்கலாம். இவ்வளவு இருப்பினும் பிடிக்காமல், மிளகாய்ப் பொடிமீது தீராக் காதல் கொண்டு கேட்டு வாங்கித் தொட்டுக் கொண்டு இணையிலா இன்பம் எய்துபவர் சிலரும் உளர். அதுபோல், பல்வேறு துறைகளில் இன்பம் காண்பவர்போல் இலக்கணத்தில் இன்பம் காணும் மேதைகளும் உளர், ‘சரியான முறையில் விளக்கப்படின், இலக்கிய இன்பத்திற்கு இலக்கணம் துணை செய்வதை அறிந்து சுவைக்க இயலும்.

எனவேதான், இந்த நூலில், அற இயல், வாழ்வியல், சமூக இயல், ஒருமைப்பாட்டு இயல்-கல்வி இயல், வழிபாட்டியல் முதலியவை தொடர்பான இலக்கிய விளக்கங்களும் உரைநடையில் தரப்பெற்றுள்ளன. இயல் தமிழ் இன்பம் பெறுவதற்காகவும், பெற்றுப் பின்பற்றுவதற்