பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/115

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

112

சுந்தர சண்முகனார்


இருந்ததோ, அவ்வாறே, அரசச் செல்வத்தைத் துறந்து காட்டிற்குப் போவாயாக என்று சொன்னபோதும் இருந்ததாம். இந்த அமைதி (சாந்த) நிலைக்குத்தான் சித்திரத்துச் செந்தாமரையை ஒப்பிட்டு நோக்கிச் சீதை வருந்தினாள் என்பதாகக் கம்பர் பாடியுள்ளார். (பாடல்: சுந்தர காண்டம்-காட்சிப் படலம்)

“மெய்த் திருப்பதம் மேவு என்ற போதினும்
இத்திருத் துறந்து ஏகு என்ற போதினும்
சித்திரத்தின் அலர்ந்த செந்தாமரை
ஒத்திருக்கும் முகத்தினை உன்னுவாள்” (20)

இந்தச் செய்தி படிப்பதற்கு மிகவும் சுவையாயுள்ள தல்லவா? அமைதிச் சுவைக்கு இதனினும் வேறு எடுத்துக் காட்டு வேண்டுமா என்ன! 

15. ஆசிரிய இராமாயணம்

கண் வழிக் கள்வன்

மிதிலையில் அரச மாளிகையின் மாடியின் நின்றிருந்த சீதையும் தெருவில் சென்ற இராமனும் ஒருவரை ஒருவர் நோக்கிக் கொண்டனர்; ஒருவரிடம் ஒருவர் உள்ளத்தைப் பறிகொடுத்தனர். அன்றிரவு சீதை இராமனது உருவை எண்ணிக் காதலால் புலம்புகின்றாள்.

“தெருவில் சென்ற அவன் என் கண்ணின் வழியாக என்னுள் புகுந்து என் பெண்மையையும் நாணையும் திருடிக் கொண்டான். இவன் ஒரு புது வகைக் கள்வனாவான்” என்று கூறி வருந்தினாள்.

மேலும் தன்னை வருத்தும் திங்கன்ள நோக்கி, இருள் என்னும் பெயருடன் வந்து உலகை விழுங்கி எனை